Publish Date: Fri, 18 Sep 2020 (16:56 IST)
Updated Date: Fri, 18 Sep 2020 (17:05 IST)
நான்கரை மாதங்களுக்குப் பின் கோயம்பேடு உணவு தானிய சந்தை இன்று திறக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மூடப்பட்ட கோயம்பேடு மார்க்கெட்டில் உணவு தானிய கிடங்கு இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக மே மாதத்தில் இருந்து கோயம்பேடு மார்க்கெட் முழுவதுமாக மூடப்பட்டது. இந்நிலையில் இப்போது சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில் மீண்டும் இன்று முதல் உணவு தானியக் கிடங்கும், 28 ஆம் தேதி முதல் காய்கறி மார்க்கெட்டும் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.