Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஞாயிற்றுக்கிழமைகளில் கோயம்பேடு சந்தை மூடல்! – மாநகராட்சி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (12:08 IST)
சென்னை முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக பரவி வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயம்பேடு சந்தை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தலைநகர் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றப்பட்டு வரும் நிலையில் சென்னையின் முக்கிய சந்தையாக கோயம்பேடு சந்தைக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இயங்காது என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா அபாயத்தை கருத்தில் கொண்டு மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை அமல்படுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments