கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பகல் நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை அவரது கள்ளக்காதலன் பெட்ரோல் ஊத்தி கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
	
 
									
										
								
																	
	
	சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சாந்தி. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தனியார் நிறுவனத்தின் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து கொண்டு பேருந்து நிலையத்திலேயே தங்கியும் இருந்துள்ளார். இவருக்கும் வடபழனி பேருந்து நிலையத்தில் துப்புரவு பணி செய்யும் முத்து என்பவருக்கும் நீண்ட காலமாக கள்ள காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	இந்நிலையில் சமீப காலமாக சாந்தி முத்துவிடம் பேசாமல் வேறு ஒரு நபரிடம் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முத்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தூங்கி கொண்டிருந்த சாந்தி மீது பெட்ரோலை ஊற்றியுள்ளார். சாந்தி என்ன நடக்கிறது என சுதாரிப்பதற்குள் தீக்குச்சியை கொளுத்தி சாந்தி மேல் போட்ட முத்து தானும் தீ வைத்துக் கொண்டுள்ளார்.
 
									
										
			        							
								
																	இதனால் இருவரும் தீப்பற்றி எரிய இதை கண்ட பயணிகள் அலறியடித்து ஓடியுள்ளனர். தீயை அணைத்த காவலர்கள் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் இறந்த நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.