டெல்லி அணி 7விக்கெட் வித்தியாத்தில் சென்னை அணியை வீழ்த்தியது.
ரிஷப் பாண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை அணியும் மோதின.
இன்றைய போட்டியில் , டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பாண்ட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தனர்.
இதில் சுரேஷ் ரெய்னா அதிகபட்சமான 54 ரன்கள் எடுத்தர். மொயின் அலி 36 ரன்கள் எடுத்தார். இந்நிலையில், 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 188 ரன்கள் எடுத்து டெல்லி அணிக்கு 189 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதையடுத்து ஆடிய டெல்லி அணி வீரர்கள் 190 ரன்களுக்கு 3 விக்கெட் இழ்ந்து 18.4 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டி வெற்றி பெற்றனர்.
டெல்லி அணியின் வெற்றிக்கு தவான் அதிகபட்சமாக 85 ரன்களும், பிரித்விஷா 72 ரன்கள் அடித்தனர்.
சென்னை அணி இன்று பேட்டிங்கில் அசத்தினாலும் பவுலுங்கில் கோட்டைவிட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.