சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதால் மக்கள் கிலோ கணக்கில் காய்கறிகளை அள்ளி செல்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைவாக இருந்ததால் காய்கறிகளும் விலை அதிகமாக விற்கப்பட்டது. கடந்த சில வாரங்கள் வரை 300 வர மட்டுமே காய்கறி லாரிகள் வரத்து இருந்து வந்தது. தற்போது கர்நாடகா தொடங்கி வட மாநிலங்கள் வரை காய்கறி வரத்து அதிகரித்துள்ளதால் நாள் ஒன்றுக்கு 400க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் வரத் தொடங்கியுள்ளன.
இதனால் பல அத்தியாவசிய காய்கறிகள் விலை பாதியாக குறைந்துள்ளது. பெரிய வெங்காயம் கிலோ 20 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் கிலோ 40 ரூபாய் வரையிலும் விற்பனையாகி வருகிறது. நேற்று வரை கிலோ 30 ரூபாய் விற்று வந்த தக்காளி 15 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. மேலும் பட்டாணி, பீன்ஸ், அவரைக்காய், கத்தரிக்காய் உள்ளிட்ட பல காய்கறிகளும் விலை பாதியாக குறைந்துள்ளதால் சிறு வியாபாரிகளும், மக்களும் காய்கறிகளை கிலோ கணக்கில் வாங்கி செல்வதால் மார்க்கெட் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.