பொள்ளாச்சி வழக்கு போலவே கோடநாடு வழக்கிலும் உரிய தீர்ப்பு கிடைக்கும்: முதல்வர் ஸ்டாலின்

Siva
புதன், 14 மே 2025 (09:06 IST)
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டது போலவே, கோடநாடு கொலை-கொள்ளை வழக்கிலும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கும் வகையில் தீர்ப்பு வரும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
“திமுக ஆட்சிக்கு வந்ததும்  பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்” என 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் பேசியிருந்தேன். அதுதான் இப்போது நடந்திருக்கிறது. 
அதேபோல், கோடநாடு கொலை-கொள்ளை வழக்கிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. உரிய தண்டனை தீர்ப்பின் மூலம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன் என்று நீலகிரியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
 
மேலும், “அதிமுக ஆட்சியில் விளையாட்டு துறை அமைச்சர் யார் என்பதே தெரியாத நிலை இருந்தது. ஆனால் தற்போது வெளிநாட்டு வீரர்கள் இங்கே வந்து கலந்து கொள்ளும் அளவுக்கு விளையாட்டு கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன” என்றும் மற்றொரு கேள்விக்கு முதல்வர் பதில் அளித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையனை திடீரென சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. திமுகவா? தவெகவா?

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.. அடுத்தது தவெகவா?

2 ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை: அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்த மருத்துவர்கள்..!

கார், பைக் மோதல்.. பைக்கில் இருந்த குழந்தை காற்றில் வீசப்பட்டு காரில் கூரையில் விழுந்தது.. அதன்பின் நிகழ்ந்த அதிர்ச்சி..!

சட்டீஸ்கரில் மர்மமான தம்பதி மரணம்: லிப்ஸ்டிக் எழுதிய குறிப்புகள் மூலம் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்