Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோடநாடு கொலை, கொள்ளை! எடப்பாடி பழனிசாமி, சசிக்கலாவிடம் விசாரணை! - சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!

Advertiesment
கோடநாடு கொலை, கொள்ளை! எடப்பாடி பழனிசாமி, சசிக்கலாவிடம் விசாரணை! - சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!

Prasanth Karthick

, வெள்ளி, 6 டிசம்பர் 2024 (14:54 IST)

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிக்கலாவிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

 

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு நுழைந்த கும்பல் பாதுகாவலர்களை தாக்கி விட்டு உள்ளே நுழைந்து கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் ஒரு காவலர் உயிரிழந்தார்.

 

இந்த வழக்கில் உடனடியாக குற்றவாளிகளை போலீஸார் கைது செய்த நிலையில், கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கும், சசிக்கலாவுக்கும் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

 

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் கோடநாடு வழக்கு தொடர்பாக தற்போதைய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடமும், சசிக்கலாவிடமும் விசாரணை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என நீலகிரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

 

இது தொடர்பான முறையீட்டை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தற்போது எடப்பாடி பழனிசாமியையும், சசிக்கலாவையும் விசாரிக்க அனுமதி அளித்துள்ளது. நீண்ட நாட்களாக மர்மமாக இருந்து வரும் இந்த வழக்கில் இது திருப்பு முனையாக பார்க்கப்பட்டாலும், இதற்கு எடப்பாடி பழனிசாமி, சசிக்கலா தரப்பு தடை கோரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை..எந்தெந்த தேதிகளில்?