Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என் அன்பு தம்பி எடப்பாடி பழனிசாமி..! எம்ஜிஆர் பேசிய வீடியோவை வெளியிட்ட அதிமுக!

Advertiesment
Edappadi MGR

Prasanth Karthick

, திங்கள், 25 நவம்பர் 2024 (09:28 IST)

ஜானகி அம்மாள் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் நேற்று நடைபெற்ற நிலையில் அதில் எம்.ஜி.ஆரை ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் பேச வைத்து அந்த வீடியோவை அதிமுக ஷேர் செய்துள்ளது.

 

 

மறைந்த அதிமுக ஸ்தாபகர் எம்.ஜிஆரின் மனைவியும், முன்னாள் முதல் அமைச்சருமான ஜானகி அம்மாளின் நூற்றாண்டு விழா அதிமுகவினரால் நேற்று சென்னையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடத்தப்பட்டது. அதில் மறைந்த எம்ஜிஆர் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.

 

அதில் பேசிய எம்ஜிஆர் “என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே, உங்கள் அனைவருக்கும் வணக்கம். எல்லாரும் நலமாக இருக்கிறீர்களா? சாப்பிட்டீர்களா? நான் எப்போதும் உங்களுடன் தான் இருக்கிறேன். உங்கள் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனது மனைவி ஜானகி நமது இயக்கமான அதிமுகவுக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்தது.

 

என் மனைவியின் நூற்றாண்டு விழாவில் என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவருக்கு விழா எடுத்தது பெருமையாக இருக்கிறது. முக்கியமாக என் அன்பு தம்பி எடப்பாடி பழனிசாமி தன்னுடைய நேர்மையான பொது வாழ்வாலும், உழைப்பாலும், விஸ்வாசத்தாலும் இன்றைக்கு நம்முடைய கட்சியின் பொதுச்செயலாளராக சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதை நான் பார்க்கின்ற நேரத்தில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி” என பேசுகிறார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிளாம்பாக்கம் ரயில் நிலைய கட்டுமான பணிகள் முடிவது எப்போது? ரயில்வே நிர்வாகம் தகவல்..!