Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாயின் கள்ளக்காதலைக் காட்டிக்கொடுத்த குழந்தை – அடித்துக் கொன்றே கொடூரன் !

Advertiesment
தாயின் கள்ளக்காதலைக் காட்டிக்கொடுத்த குழந்தை – அடித்துக் கொன்றே கொடூரன் !
, திங்கள், 24 பிப்ரவரி 2020 (09:10 IST)
திருநெல்வேலியில் தங்கள் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்த குழந்தையை கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளார் ஒரு கொடூர நபர்.

நெல்லை மாவட்டம் விக்ரமசிங்கபுரம் அருகே உள்ள டாணா பகுதியைச் சேர்ந்தவர் அந்தோனி பிரகாஷ். இவருக்கும் பொள்ளாச்சியை சேர்ந்த தீபா என்ற பெண்ணுக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு தற்போது 4 வயதில் லோகேஷ் என்ற மகன் உள்ளார்.

லாரி ஓட்டுனரான அந்தோனி அதிகமாக வெளியூர்களுக்கு சென்று வரும் வழக்கம் உடையவர். இந்நிலையில் தீபாவுக்கு சொரிமுத்து என்ற நபரோடு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதைப் பற்றி அறிந்த அந்தோனி மனைவிடம் இதுபற்றி கேட்க அவர் தற்கொலை முயற்சி செய்துகொண்டுள்ளார். ஆனால் அவரைக் காப்பாற்றியுள்ளனர்.

ஆனாலும் தீபா சொரிமுத்துவுடனான பழக்கத்தை தீபா நிறுத்தவில்லை. கடந்த 20 ஆம் தேதி சிவராத்திரியை முன்னிட்டு  தீபா, தன் கணவர் வெளியூர் சென்றிருந்த போது சொரிமுத்துவையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது தீபாவின் எண்ணுக்கு அந்தோனி கால் செய்ய, குழந்தை கையில் போன் இருந்ததால் அவன் அதை எடுத்துப் பேசியுள்ளான். அப்போது குழந்தை உண்மயை சொல்லியதோடு மட்டுமில்லாமல் சொரிமுத்துவையும் வீடியோ காலில் காட்டியுள்ளார்.

இதனால் மாட்டிக்கொண்ட ஆத்திரத்தில் குழந்தையை கொடூரமாகத் தாக்கியுள்ளார் சொரிமுத்து. இதில் அவன் மயக்கமடைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனாலும் குழந்தை உயிரிழந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனைக்கு வந்த அந்தோனி மற்றும் அவரது உறவினர்கள் சொரிமுத்துவிடம் தகராறு செய்ய அவர் அங்கிருந்து தப்பித்து தலைமறைவாகியுள்ளார்.

போலிஸார் தீபாவிடம் விசாரணை நடத்த அவர் நடந்ததை சொல்லியுள்ளார். இதையடுத்து போலிஸார் இருவரையும் கைது செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெட்ரோல் – டீசல்: இன்றைய விலை நிலவரம்!