Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாமன்னன் உதயநிதி ஸ்டாலினுக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவி கொடுப்பார் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்!

Advertiesment
dmk Udayanidhi

J.Durai

, வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (18:16 IST)
கோவை பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் அவர்களை நேரில் சந்தித்த  அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலைஞரின் 100 ரூபாய் நாணயத்தை அவரிடம் வழங்கி ஆசிபெற்றார்.
 
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்.......
 
பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகளார் அவர்களின் இந்த மடம் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும்,செம்மொழி நடத்துவதற்கு உறுதுணையாக உள்ளது.மேலும் முதல்வர் சந்தித்தபோது, கோவைக்கு  செல்கிறேன், பேரூர் ஆதீனத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலைஞர் நூற்றாண்டு நாணயத்தை அளிக்க உள்ளேன் என சொன்னேன். அவர்  சார்பாகவும் வாழ்த்து சொன்னார்.ஒட்டுமொத்த தமிழ் உணர்வோடு இருக்கக்கூடிய அனைவரையும் ஒருங்கிணைப்பது தான் தமிழர் கலாச்சாரம். தமிழோடு இருக்கக்கூடிய பேரூர் ஆதனிம் இருக்க வேண்டும்.
 
மத்திய அரசு கொண்டு வரும் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதவை ஆரம்பித்திலிருந்து  எதிர்த்து வருகிறோம்.  ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் அதேபோல் ஜமாத்தின் ஒருமித்த கருத்தும் இந்த வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதவிற்க்கு எதிராக உள்ளது.மத நல்லிணக்கத்திற்க்கு  வேற்றுமையில் ஒற்றுமை காணும் வேலையில் மத்திய அரசு இந்த சட்டம் மூலம்  ஒற்றுமையில் வேற்றுமையை கான வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.
இது  கவலை அளிப்பதாக உள்ளது.
 
மேலும் உதயநிதி துணை முதல்வர் ஆக போகிறார் என்ற செய்திக்கு பதிலளித்த செஞ்சி மஸ்தான்:
 
கலைஞர் உரிய நேரத்தில் உள்ளாட்சிதுறையயும் ,துணை முதல்வர் பதவியையும்  ஸ்டாலினுக்கு வழங்கினார். குறிப்பாக 
உழைப்பு, உழைப்பு என்றால் அது  ஸ்டாலின் தான் என்று  கலைஞர் சொன்னார்.
 
அதேபோல் அந்த உழைப்பிற்கு  எடுத்து காட்டாக ஒட்டுமொத்த தமிழ்சமுதாயத்தின் செல்லபிள்ளை கலைஞரின் பேரப்பிள்ளை,மாமன்னன் உதயநிதிஸ்டாலினும்
இன்று தமிழகம் முழுவதும் இளைஞர்களை ஒன்று சேர்த்து கழகத்தை வழுப்படுத்துவதாக தெரிவித்த அவர்,
அந்த உழைப்புக்கு ஏற்றவாறு உரிய நேரத்தில் கலைஞரை போல ஸ்டாலினும் உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு கொடுப்பார் எனவும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2026 தேர்தலில் MIC இல்லை..! வேறு சின்னத்தில் போட்டி - சீமான்.!!