உலக பிரபலமான வால்ட் டிஸ்னி நிறுவனம் தனது இந்திய ஒளிபரப்பு மற்றும் ஓடிடி உள்ளிட்ட சேவைகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், வியாகாம் 18 மற்றும் ஸ்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுடன் ஒன்றிணைகிறது.
இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் பல வகையான தொழில்களை மேற்கொண்டு வரும் நிறுவனம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான Viacom 18 இந்தியா முழுவதிற்கும் செய்தி சேனல்கள், எண்டெர்டியின்மெண்ட், ஸ்போர்ட்ஸ் சேனல்களை வழங்கி வருகிறது.
வால்ட் டிஸ்னியின் கிளை நிறுவனமான ஸ்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் மூவிஸ் உட்பட பல மொழி சேனல்களும் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தற்போது இந்திய சந்தையில் தங்களில் சேவையை மேம்படுத்துவதற்காக வியாகாம் 18 மற்றும் ஸ்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களை ரிலையன்ஸ் மற்றும் வால்ட் டிஸ்னி ஒன்றிணைக்கிறது. இதனால் இந்த சேவைகளை மேலும் பல மக்களிடம் கொண்டு செல்ல முடிவதுடன் குறைந்த விலையில் பேக்கேஜாக அளிக்கவும் வாய்ப்புள்ளதாகவும், இரு தரப்பு உரிமம் பெற்ற நிகழ்ச்சிகளும் பரிமாறிக்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரிலையன்ஸ் நிறுவனம் இந்த ப்ராஜெக்டிற்காக ரூ.11,500 கோடியை மேம்படுத்தல் திட்டமிடலுக்காக ரிலையன்ஸ் ஒதுக்குவதாக அறிவித்துள்ளது.
தற்போது டிஸ்னி + ஓடிடி ஹாட்ஸ்டாருடன் இணைந்து இந்தியாவில் ஓடிடி சேவைகளை வழங்கி வரும் நிலையில், வரும் நாட்களில் ஜியோ சினிமாவுடன் டிஸ்னி ப்ளஸ் நிகழ்ச்சிகள் இணையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.