காமெடி நடிகருடன் காதலில் விழுந்த நடிகை கீர்த்தி சுரேஷ் : 'உண்மையா' என அதிர்ச்சியில் ரசிகர்கள்
காமெடி நடிகருடன் காதலில் விழுந்த நடிகை கீர்த்தி சுரேஷ் : 'உண்மையா' என அதிர்ச்சியில் ரசிகர்கள்
Publish Date: Mon, 22 Aug 2016 (13:56 IST)
Updated Date: Mon, 22 Aug 2016 (14:14 IST)
விஜய் நடிக்கும் 60 வது படத்தில், அவருடன் ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடித்து வருகிறார்.
இப்படத்தில், காமெடி நடிகர் சதீஷும் நடித்து வருகிறார். இந்நிலையில், கீர்த்திசுரேஷ், சதீஷ் மீது காதலில் விழுந்ததாக கூறப்படுகிறது.இது குறித்து, பட குழுவினர் கூறுகையில், “சதீஷ், கீர்த்தியோடு இணக்கமாகவே பழகினார், அனால், காதல் வரை போகும் என்று நாங்கள் நம்பவில்லை” என்றனர்.
இதற்கிடையே ரக்ஷாபந்தனையொட்டி, டுவிட்டரில் கீர்த்தி ஒரு டுவிட் செய்திருந்தார். அதில், ”எங்க இருக்கீங்க சதீஷ், ராக்கி கட்ட காலையில இருந்து தேடிக்கிட்டு இருக்கேன்” என டுவிட் செய்திருந்தார். இதற்கு பதில் அளித்து டுவிட் செய்திருந்த சதீஷ், ”ஹே கீசு மா பப்ளிக்ல இப்டியே பேசு, உலகம் அப்ப தான் நம்மல நம்பும்” என தெரிவித்திருந்தார்.
மேலும், பட நிகழ்ச்சியில் இருவரும் மாலையுடன் நின்றிருந்த புகைப்படங்கள் பரவியது. நடிகர் இளையதளபதி விஜய்யும், இவர்கள் காதல் தெரிந்து வாழ்த்தியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
Dinesh
Publish Date: Mon, 22 Aug 2016 (13:56 IST)
Updated Date: Mon, 22 Aug 2016 (14:14 IST)