Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 9 April 2025
webdunia

தேர்தலுக்கு முன் கதிர் ஆனந்த் கைது செய்யப்படுவாரா? திமுக வட்டாரத்தில் பரபரப்பு..!

Advertiesment
மக்களவைத் தேர்தல்

Mahendran

, சனி, 23 மார்ச் 2024 (08:09 IST)
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ள அமலாக்கத்துறையின் அடுத்த டார்கெட் திமுக என்றும் திமுகவில் உள்ள முக்கிய புள்ளி ஒருவரை கைது செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் தனக்கு நெருக்கமான மத்திய அரசு உயர் அதிகாரிகள் கூறிய ஒரு தகவலால் பதட்டத்தில் இருப்பதாகவும் அவரது மகன் கதிர் ஆனந்த்தை தேர்தலுக்கு முன்பே கைது செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது
ஏற்கனவே கதிர் ஆனந்த் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகையும் தாக்கல் ஆகி இருக்கும் நிலையில் மீண்டும் அவர் வேலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மார்ச் 19ஆம் தேதி திமுக பொருளாளர் ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் அடுத்த கட்டமாக கதிர் ஆனந்த்தை  அமலாக்கத்துறை நெருங்கலாம் என்றும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் திமுக தலைமை துரைமுருகனுக்கும் அவரது மகனுக்கும் முழு ஆதரவு தரும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Mahendran
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக நம்ப வைத்து ஏமாற்றிவிட்டது.. ஆதரவாளர்களிடம் புலம்பினாரா ஓபிஎஸ்?