Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கச்சத்தீவு தீர்மானம் ஒரு நாடகம்.. 4 வருடமாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ஈபிஎஸ்

Advertiesment

Siva

, புதன், 2 ஏப்ரல் 2025 (14:18 IST)
தமிழக சட்டமன்றத்தில் இன்று கச்சத்தீவு தீர்மானம் இயற்றப்பட்ட நிலையில், இது ஒரு நாடகம் என்றும், நான்கு வருடமாக தீர்மானம் இயற்றாமல், தேர்தல் நேரத்தில் மட்டும் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
 
கச்சத்தீவு தீர்மானத்திற்காக நடத்தப்பட்ட விவாதத்தில் அனைத்து கட்சி எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர். தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
 
இதனை அடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, கச்சத்தீவை மீட்டெடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்கவில்லை என்றும், கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதால் மீனவர்கள் சோதனைக்கு உள்ளாகி உள்ளனர் என்றும் தெரிவித்தார்.
 
முந்தைய திமுக ஆட்சியின் காலத்திலேயே மத்தியில் ஐந்து பிரதமர் ஆண்டிருந்தபோதும் கச்சத்தீவு குறித்து எந்த தீர்மானமும் ஏற்கப்படவில்லை, அதனை அவர்கள் வலியுறுத்தவும் செய்யவில்லை. தற்போது, தேர்தலை மனதில் கொண்டு இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர்.
 
சட்டப்பேரவையில் இன்று இயற்றப்பட்ட கச்சத்தீவு தீர்மானம் ஒரு நாடகம். "நான்கு ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தர்பூசணியில் நிறமிகள் கலப்பா? விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறி! - ஆய்வு செய்த அதிகாரிகள் கூறியது என்ன?