Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கக்கா போற இடத்துல என்ன மா கிரியேட்டிவிட்டி: கஸ்தூரியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

கக்கா போற இடத்துல என்ன மா கிரியேட்டிவிட்டி: கஸ்தூரியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்
, புதன், 13 பிப்ரவரி 2019 (15:45 IST)
டிக் டாக்கிற்கு ஆதரவாக பேசிய கஸ்தூரியை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
 
சமூக வலைதளங்களான பேஸ்புக், டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை முழுமையாக தற்போது டிக் டாக் வீடியோக்கள் ஆக்கரமிக்க ஆரம்பித்துள்ளன. அவற்றில் திறமையை வெளிக்காட்டும் வீடியோ என்பது மிகவும் குறைவானதே. 
 
பெரும்பாலும் ஒன்றுக்கும் உதவாத ஆபாச வீடியோக்களே. தமிழ் பாடல்களுக்கு அல்லது தமிழ் படங்களில் வரும் ஆபாசக் காட்சிகளுக்கு வாயசைப்பதோதான் நிரம்பிக் கிடக்கிறது.
 
நேற்று சட்டப்பேரவையில் கலாச்சாரத்தை சீரழிக்கும் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரி கோரிக்கை விடுத்தார். இதற்கு அமைச்சர் மணிகண்டன் டிக் டாக்கை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு பரிந்துரை செய்யும் என்றார். 
webdunia
 
இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில், டிக்டாக்கால் நமது கலாச்சாரம், பண்பாடு சீர்குலைகிறது என அமைச்சர் மணிகண்டன் கூறியிருக்கிறார். நிஜமாகவே நீங்கள் டிக் டாக்கை தடை செய்துவிடுவீர்களா? இதுபோல் கிட்ரியேட்டிவிட்டியை நீங்கள் முடக்கப்பார்க்கிறீர்களா என சொல்லி ஒரு வீடியோவை பதிவிட்டிருக்கிறார்.
 
 
கஸ்தூரின் இந்த பதிவை பார்த்த ஒருவர் கக்கா போற இடத்துல டிக் டாக்க வெச்சு என்ன மா கிரியேட்டிவிட்டி என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பலர் அரசின் இந்த முடிவு சரியானதே என கஸ்தூரிக்கு ரிப்ளை செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் தனித்துப் போட்டியிடத் தயார் – தமிழிசை சீரியஸ் காமெடி…