Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'மனைவியை பிரிந்தவர்... உறவுகள் பற்றி அறியாதவர் மோடி'- சந்திரபாபு நாயுடு விமர்சனம்

Advertiesment
Divorced wife
, திங்கள், 11 பிப்ரவரி 2019 (15:29 IST)
இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக எல்லா கட்சிகளும் தம் பிர்சாரத்தை துவங்கியுள்ளன.இந்நிலையில் ஒரு பக்கம் கூட்டணிக்கு வலுசேர்க்க பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் ஆந்திராவில் சுற்றுப்பயணம் செய்த பிரதமர் மோடி  அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக விமர்சித்தார்.அப்போது  லோகேஸ் என்பவரின் தந்தைதான் சந்திரபாபு நாயுடு என்று பேசினார்.
இந்நிலையில் மோடியின் விமர்சனத்துக்கு பதிலளித்து, விஜயவாடாவில் நடந்த நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு  பேசியதாவது:
 
எனது குடும்பத்தாரால் நான் பெருமை அடைகிறேன்.ஏனெனில் எனக்கு குடும்ப உறவு உள்ளது,ஆனால் பிரதமர் மோடியோ திருமணம் செய்து விட்டு மனைவியை பிரிந்து வாழ்கிறார். மேலும் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே பிரிந்து வாழுகிறார்.அவரது குருவான அத்வானியையே ஒதுக்கி வைத்தவர் தான் மோடி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 
பிரதமர் மோடிக்கும், சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையே வலுத்து வரும் இந்த காரசாரமாக விமரசனங்களால் தேசிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர்ந்து தவிர்க்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து – மோடியை விளாசிய ஸ்டாலின் !