Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொழிலாளர்களை சுட்ட ஆயுததாரிகள்

Advertiesment
kashmir labour was shot
, சனி, 16 அக்டோபர் 2021 (22:03 IST)

காஷ்மீரில் இரு வேறு இடங்களில் வெளியூர் தொழிலாளர்களை சுட்ட ஆயுததாரிகள் - ஒருவர் பலி

ஸ்ரீநகர் மற்று புல்வாமாவில் இரண்டு பேர் மீது ஆயுததாரிகள் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் காயம் அடைந்துள்ளதாக காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.

இருவரும் காஷ்மீருக்கு வெளியே உள்ள மாநிலங்களில் வசிப்பவர்கள். ஸ்ரீநகரில் சுடப்பட்ட நபரின் பெயர் அரவிந்த் குமார் சாஹ் என்றும் அவர் பிகாரின் பங்கா பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது. மற்றொருவர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஜாகிர் அஹமது என்று தெரிய வந்துள்ளது. காயம் அடைந்துள்ள ஜாகிர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிப்பு !