கரூர் துயரம்: பாதிக்கப்பட்டவர்களிடம் வீடியோ காலில் பேசிய விஜய்!

Prasanth K
செவ்வாய், 7 அக்டோபர் 2025 (11:07 IST)

கரூர் கூட்டநெரிசலில் பலியானவர்கள் குடும்பங்களிடம் சம்பவம் நடந்து 10 நாட்கள் கழித்து வீடியோ காலில் பேசியுள்ளார் விஜய்.

 

கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக பிரச்சாரக் கூட்டம் நடந்த நிலையில் அதில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து விஜய் உடனடியாக அங்கிருந்து கிளம்பிவிட்ட நிலையில், வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டதுடன், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்தார்..

 

ஆனால் இந்த சம்பவம் நடந்து இன்றோடு 10 நாட்களாகிவிட்ட நிலையில் விஜய் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காதது சர்ச்சையை ஏற்படுத்தி வந்தட்து, இந்நிலையில் கூட்டநெரிசலில் பலியான தனுஷ்குமார் என்பவரின் குடும்பத்திடம் வீடியோ கால் மூலமாக விஜய் பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவரின் தங்கையிடம் பேசிய விஜய் தான் அண்ணன் ஸ்தானத்தில் இருந்து அனைத்தையும் செய்து தருவதாக ஆறுதல் கூறியுள்ளார். 

 

சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை வீடியோ காலில் பேசிய விஜய் அதை யாரும் புகைப்படமோ, வீடியோவோ எடுக்க வேண்டாம் என கூறிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments