Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 1 April 2025
webdunia

சர்சையை கிளப்பும் எப்.ஐ.ஆர்; நான் எந்த புகாரும் அளிக்கவில்லை - துணை தாசில்தார்

Advertiesment
துணை தாசில்தார்
, ஞாயிறு, 3 ஜூன் 2018 (19:39 IST)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடர்பான கலவரம் குறித்த எப்.ஐ.ஆரில் துனை தாசில்தார் புகார் அளித்தாக குறிப்பிட்டள்ளதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

 
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட கலவரம், துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து தூத்துக்குடி வடபாகம், சிப்காட், தென்பாகம் போலீசார் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். 
 
தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பதில் திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலர் கோபால் புகார் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தான் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
சார் ஆட்சியர் உத்தரவின் பேரில் நிர்வாக நடுவராக 3-வது மைல் பகுதியில் பணியில் இருந்தேன். அந்த பகுதியில் எவ்வித பிரச்சினையும் இல்லை. இது தொடர்பாக நான் எந்த காவல்நிலையத்திலும் எந்த புகார் அளிக்கவில்லை. தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலைத்தில் நான் புகார் அளித்ததாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதால் நானும் எனது குடும்பத்தாரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம் என்று மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கத்திற்கு புகார் தெரிவித்துள்ளார்.
 
இதையடுத்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனது மொத்த சொத்துக்களையும் ஏழைகளுக்கு தானமாக வழங்கிய கோடீஸ்வரர்