Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி கரூர் அருகே ஆர்பாட்டம்

ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி கரூர் அருகே ஆர்பாட்டம்
, வியாழன், 8 மார்ச் 2018 (16:36 IST)
கரூர் மாவட்ட ம.தி.மு.க மாணவரணி சார்பில் பெரியார் சிலையை அகற்றக்கோரி முகநூலில் பதிவிட்ட பாரதீய ஜனதா கட்சி நிர்வாகி ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி கரூர் அருகே ஆர்பாட்டம் செய்தனர்.



கரூர் ம.தி.மு.க மாவட்ட மாணவரணி சார்பில், தந்தை பெரியார் சிலையை அகற்றுவோம் என்று நாகரீகமில்லாமல் முகநூலில் பதிவிட்ட பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. கரூர் அடுத்த கிருஷ்ணராயபுரம் பேருந்து நிலையம் அருகே மாவட்ட ம.தி.மு.க மாணவரணி அமைப்பாளர் இரா.காமராஜ் தலைமையில், நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் நாவை அடக்குவோம், அடக்கிப்பேசு, ஹெச்.ராஜாவே நாவை அடக்கு என்றும், பெரியார் சிலையில் கை வைத்தால் கை, காலை முறிப்போம் என்றும் முழக்கங்கள் எழுப்பினார்கள்.

மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் எம்.முத்து, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வீரா.கோபி, பழைய ஜெயங்கொண்ட பேரூர் கழக செயலாளர் மா.சோமு, கிருஷ்ணராயபுரம் பேரூர் கழக செயலாளர் இரா.வெங்கடாசலம், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வீ.ஆனந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பினர்.

கரூர் சி.ஆனந்தகுமார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எங்க அக்கா பெரியாரின் பக்தை - கொதித்தெழுந்த ஹெச்.ராஜாவின் ஆதரவாளர்