Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்றைய கொரோனா பாதிப்பு, தமிழ்கத்தில் 2334, சென்னையில் 601!

இன்றைய கொரோனா பாதிப்பு, தமிழ்கத்தில் 2334, சென்னையில் 601!
, ஞாயிறு, 8 நவம்பர் 2020 (18:27 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 2334 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 743,822 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 2334  பேர்களில் 601 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 18,894 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்
 
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 20 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 11344 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 2,386 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 713,584 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 74,589 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 102,86,295 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜனவரி முதல் அனைத்து வாகனங்களுக்கும் Fastag கட்டாயம் ! மத்திய அரசு