கருப்பர் கூட்டம் யூ ட்யூப் சேனலில் 500 வீடியோக்கள் நீக்கம்: அதிரடி நடவடிக்கை

Webdunia
செவ்வாய், 21 ஜூலை 2020 (11:44 IST)
கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் சமீபத்தில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறான விமர்சனம் செய்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் கடவுள் இல்லை என்று கூறிய கட்சிகளின் தலைவர்களை கூட பேச வைத்தது என்பதும் கருப்பர் கூட்டத்திற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று பதற வைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகிகளான செந்தில் வாசன் மற்றும் சுரேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து இன்று மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
இந்த நிலையில் சமீபத்தில் சென்னை தி நகரில் உள்ள கருப்பர் கூட்டம் யூ-டியூப் அலுவலகத்தில் சோதனை செய்த சைபர் கிரைம் போலீசார் முக்கிய ஆதாரங்களை கைப்பற்றினார்கள். மேலும் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் மேலும் பல வீடியோக்கள் இருப்பதாகவும் இதனால் அந்த சேனலை தடைசெய்ய வேண்டுமென யூடியூப் நிர்வாகத்திற்கு சைபர் கிரைம் போலீசார் கடிதம் எழுதியதாகவும் தகவல்கள் வெளிவந்தன 
 
இதனை அடுத்து தற்போது கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் இருந்து 500 வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாக சென்னை சைபர் கிரைம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இந்து கடவுள்களை இழிவு செய்யும் வகையில் கருப்பர் கூட்டம் பதிவேற்றிய 500 வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாக சென்னை சைபர் கிரைம் போலீசார் தெரிவித்து உள்ளது முருகபக்தர்களையும், இந்து மத ஆதரவாளர்களையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல அலுவலர்களுக்கு SIR செயலியை இயக்க தெரியவில்லை.. செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு..!

அமெரிக்க விசா கிடைக்கவில்லை.. மனவிரக்தியில் பெண் டாக்டர் தற்கொலை:

அரசு மருத்துவமனை அருகே கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தை சடலம்! வேலூரில் அதிர்ச்சி சம்பவம்.!

தவெக 'ஆச்சரியக்குறியாக' இருந்தாலும், 'தற்குறியாக' இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை: அமைச்சர் ரகுபதி

என் தலைவர பத்தி தப்பா பேசுவியா?!.. ரோட்டில் உருண்டு புரண்ட திமுக, தவெக தொண்டர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments