Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கருப்பர் கூட்டம் போல இன்னும் சில சேனல்கள் இருக்கின்றன – திரௌபதி இயக்குனரின் பட்டியல்!

Advertiesment
கருப்பர் கூட்டம் போல இன்னும் சில சேனல்கள் இருக்கின்றன – திரௌபதி இயக்குனரின் பட்டியல்!
, வெள்ளி, 17 ஜூலை 2020 (17:50 IST)
திரௌபதி படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் மோகன் சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய கருப்பர் கூட்டம் யு டியூப் சேனல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

முருகனைப் பற்றிய கந்த சஷ்டி கவசம் பற்றிப் பேசி சர்ச்சையில் சிக்கிய கருப்பர் கூட்டம் இணையதள சேனலை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இந்நிலையில் கருப்பர் கூட்டம் சேனலுக்கு ஆதரவாக பெரியாரிய இயக்கங்கள் மற்றும் திமுகவினரை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே போல இந்து அமைப்பு மற்றும் வலதுசாரிகள் எதிரான கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திரௌபதி படத்தின் இயக்குனரான மோகன் தனது சமூகவலைதள பக்கத்தில் ‘இந்த கருப்பர் கூட்டம் போலவே இன்னும் சில இந்து மத எதிர்ப்பு youtube சேனல்கள் இருக்காங்க. எனக்கு தெரிந்த சில
U2brutus
கருப்பர் தேசம்
Plip Plip

Second show

இன்னும் பல இது போல உள்ளது.. இவர்களை புறக்கணிக்க தொடங்குங்கள்.. எதிர் கருத்து வையுங்கள்.. கருத்தை கருத்தால் எதிர்க்க வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சண்டைக்கு வறீங்களா.... மல்லுக்கட்டி நிற்கும் பூனம் பாஜ்வா!