Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பொருட்டே இல்லை: கருணாஸ் தடாலடி!

அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பொருட்டே இல்லை: கருணாஸ் தடாலடி!

Advertiesment
அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பொருட்டே இல்லை: கருணாஸ் தடாலடி!
, திங்கள், 9 அக்டோபர் 2017 (17:55 IST)
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு எம்எல்ஏவாக உள்ள அதிமுக கூட்டணி கட்சியை சேர்ந்த நடிகர் கருணாஸ் தற்போது தினகரன், சசிகலா ஆதரவு அணியில் உள்ளார். இந்நிலையில் அவர் சசிகலா, தினகரனுக்கு எதிராக பேசி வரும் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக பேசியுள்ளார்.


 
 
சென்னை பட்டினப்பாக்கத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள். இன்று நடராஜனுக்காக ஆடும் அந்த தசை, அன்று ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் போது ஆடாதது ஏன்?.
 
ஹெலிகாப்டர் வரவழைத்து காப்பாற்றுவதற்கான அனைத்து முயற்சியையும் செய்கிறார்கள். அன்று ஜெயலலிதாவுக்கு இது போல் செயல்படாதது ஏன்? ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது தமிழகம் முழுவதும் அத்தனை தொண்டர்களும் எத்தனையோ பிராத்தனை செய்தனர். ஆனால் இவர்கள் குடும்பம் ஏதாவது ஒரு பிராத்தனை செய்ததா? என ஜெயக்குமார் சசிகலாவை கடுமையாக சீண்டினார்.
 
இது குறித்து பிரபல தனியார் வார இதழ் ஒன்று கருணாஸிடம் கேள்வி கேட்டது. இதற்கு பதில் அளித்த கருணாஸ், ஜெயக்குமாரை ஒரு அமைச்சராகவோ, அவரது பேச்சை ஒரு பொருட்டாகவோ மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நரம்பில்லாத நாக்கு எப்படிவேண்டுமானாலும் பேசும் என்று நமது முன்னோர்கன் ஜெயக்குமாரைப் போன்றவர்களை வைத்துத்தான் சொல்லியிருக்கிறார்கள். நேரத்துக்கு ஏற்றது போல பதவி சுகத்துக்காக எல்லாவற்றையும் மறந்து பேசக்கூடாது என அதிரடியாக கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூளைமேடு உதவி ஆய்வாளராக திருநங்கை பிரித்திகா யாசினி: காரணம் இதுவா இருக்குமோ?