Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கொன்றும் பயமில்லை. தப்பி ஓட வில்லை - கருணாஸ் தில் பேட்டி

Webdunia
வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (12:13 IST)
போலீசார் தொடுத்துள்ள வழக்களை நான் சந்திப்பேன் என கருணாஸ் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

 
தமிழக முதல்வர் மற்றும் உயர் காவல்துறை அதிகாரி குறித்து கருணாஸ் எம்.எல்.ஏ தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு அவர் வருத்தமும் தெரிவித்தார். ஆனால், கருணாஸ் மீது 8 வழக்குகளின் கீழ் காவல் துறை வழக்குப்பதிவு செய்தது. னவே, எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
 
அதேசமயம், கைதுக்கு பயந்து கருணாஸ் தலைமைறைவாகி விட்டதாகவும், அவரை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியானது.
 
இந்நிலையில், நான் தலைமறைவாக வில்லை வீட்டில்தான் இருக்கிறேன் என கருணாஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், செய்தியாளர்களிடம் பேசிய அவர் “அந்த வீடியோ முழுவதையும் நீங்கள் பார்க்கவில்லை. என் கட்சியினர் மீது போலீசார் தவறான வழக்குகள் போட்டு கைது செய்து வருகிறார்கள். அதை கண்டித்தேன். அதற்காக வருத்தமும் தெரிவித்து விட்டேன். 
 
ஜனாதிபதி தேர்தலில் கூடத்தான் நான் வாக்களித்தேன். அதற்காக ஜனாதிபதியை நான்தான் தேர்வு செய்தேன் எனக்கூறினால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? அப்படித்தன் கூவத்தூர் விவகாரமும். நான் அப்போது அங்குதான் இருந்தேன். முதல்வரை நாங்கள் அனைவரும்தான் தேர்ந்தெடுத்தோம். 
 
நான் தலைமறைவாக வில்லை. யாருக்கும் பயப்படவில்லை. ஒரு எம்.எல்.ஏ.வான என்னையே இப்படி மிரட்டி பார்க்கின்றனர் என்றால், சாதாரண குடிமகன்களை என்ன செய்வார்கள்?. நான் வழக்குகளை சந்தித்து கொள்கிறேன்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments