Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கருணாநிதி பிறந்த நாள் - மு.க.அழகிரி பராக்..பராக்..

கருணாநிதி பிறந்த நாள் - மு.க.அழகிரி பராக்..பராக்..

Advertiesment
கருணாநிதி பிறந்த நாள் - மு.க.அழகிரி பராக்..பராக்..

கே.என்.வடிவேல்

, வெள்ளி, 3 ஜூன் 2016 (11:22 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் 93ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரை வாழ்த்த அவரது மூத்த மகன் மு.க. அழகிரி இன்று வாழ்த்த வருவதாக உள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.
 

 
திமுக தலைவர் கருணாநிதி, திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் கடந்த 1924 ஆம் ஆண்டு ஜூன் மதம் 3ஆம் தேதி பிறந்தார். அவருக்கு 92 வயது முடிந்து, இன்று 93 வயதில் அடியெடுத்து வைக்கிறார். இதனையடுத்து, அவரது வீட்டில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
 
அப்போது, அவருக்கு அவரது மனைவி, மகன் மு.க.ஸ்டாலின், மகள் கனிமொழி உள்ளிட்டவர்கள் உடன் இருந்து வாழ்த்து தெரிவித்தனர்.
 
அதே போல, பிரபல அரசியல் தலைவர்கள், திமுக நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
 
இந்த நிலையில், மே 16 ஆம் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலுக்கு முன்பு  திமுக தலைவர் கருணாநிதியை அவரது மூத்த மகன் மு.க.அழகிரி சந்தித்தார்.
 
அதுபோலவே, இன்றும் தனது தொண்டர்களுடன் வந்து மு.க.அழகிரி வாழ்த்து தெரிவிப்பாரா? என திமுக கட்சி நிர்வாகிகளிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவின் வெற்றிக்கு 100 கோடி ரூபாய் செலவு: பரபரப்பு குற்றச்சாட்டு