Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’கருணாநிதி - டி.டி.வி தினகரன் இடையே ரகசிய உடன்படிக்கை ’- அமைச்சர் தங்கமணி பகீர்

Advertiesment
’கருணாநிதி - டி.டி.வி தினகரன் இடையே ரகசிய உடன்படிக்கை ’- அமைச்சர் தங்கமணி பகீர்
, புதன், 27 பிப்ரவரி 2019 (11:59 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71 ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி அதிமுகவினர் தடபுடலாக பல பொதுக்கூட்டங்கள்,விழா மற்றும் நலத்திட்ட உதவிகளை செய்துவருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் முசிறியில் அதிமுக எம்.எல்.ஏ செல்வராஜ் தலைமையில் ஜெயலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்க மணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இவ்விழாவில் பொதுமக்களுக்கு  வேட்டி, சேலை, இஸ்திரி பெட்டி, தையல் இயந்திரம், சைக்கிள், போன்றவை வழங்கப்பட்டது.
 
இதனையடுத்து பேசிய அமைச்சர் தங்கமணி கூறியதாவது:
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவர் மருத்துவமனையில் இருந்த 75 நாட்களும், அவரைக் காண சசிக்கலா குடும்பத்தினர் யாரையும்  உள்ளே அனுமதிக்கவில்லை. 
 
கருணாநிதி தான் ஆட்சியில் இருந்த போது ஒரு திட்டம் அறிவித்தால் அதன் மூலம் தன் குடும்பத்துக்கு ஆதாயம் உள்ளதா என்று பார்ப்பார். அப்படித்தான் அவரது ஆட்சியில் கலர் டிவி கொடுக்கப்பட்டது. இதனால் அவரது குடும்பத்துக்கு கேபிள் டிவி மூலம் வருமானமாக ரூ. 150 கோடி கிடைத்தது என்று தெரிவித்தார். 
 
மேலும், ஜெயலலிதா உயிருடன் இருந்த போது அவருக்கு தெரியாமல் ரூ. 1000 கோடிக்கு லண்டனில் ஹோட்டல் வாங்கியர்தான் டிடிவி தினகரன் . இது சம்மந்தமாக திமுகவினர் ஜெயலலிதா மீது வழக்குப் போட்டனர். ஆனால் டிடி,வி தினகரன் இவ்வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க  கருணாநிதியுடன் ரகசிய வழியில் பேச்சு நடத்தி உடன்படிக்கை செய்தவர் தான் இந்த தினகரன். அவர் புதுச்சேரியில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர் தான் தற்போது அதிமுகவை துரோகி என்கிறார். இவ்வாறும் அவர் பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராமதாஸ் ஒரு பொலிட்டிக்கல் புரோக்கர்: புகழேந்தி பொளேர்!!