மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலைதாவின் பிறந்த நாள் கடந்த 24 ஆம் தேதி கொண்டாடப்பட்டதை அடுத்து, திண்டுக்கல் மாவட்ட அதிமுக சார்பில் மணிக்கூண்டில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனீவாசன் பேசியது பின்வருமாறு, அதிமுக கூட்டணியை பார்த்து ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் தாங்கமுடியவில்லை. அதனால்தான் அதிமுக கூட்டணியில் பாமக சேர்ந்துள்ளது, பணத்துக்காகத்தான் என்கிறார்.
அப்படியென்றால் திமுக, பணத்தை கொடுத்து பாமகவை தனது கூட்டணிக்குள் சேர்க்க வேண்டியதுதானே. கருணாநிதி எப்படி பொய் பேசி ஆட்சியை பிடித்தாரோ, அதே போல் ஸ்டாலினும் பொய் பேசி ஆட்சியை பிடிக்க நினைக்கிறார்.
ஊழல் இல்லாத ஆட்சி என்றால் அது பாஜக ஆட்சிதான். இந்திய நாட்டின் பெருமையை உலகம் முழுவதும் நிலைநாட்டியவர் மோடி. ஊழல் இல்லாத பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் என்ன தவறு? என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.
மறைந்த தலைவர் கருணாநிதி பற்றியும், அவரது ஆட்சியை பற்றியும் திண்டுக்கல் சீனீவாசன் இவ்வாறு பேசியுள்ளது திமுக தொண்டர்களுக்கு மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.