Publish Date: Sun, 21 Mar 2021 (12:13 IST)
Updated Date: Sun, 21 Mar 2021 (12:15 IST)
தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதியான கார்த்திக் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழில் பல்வேறு படங்களில் நடித்த புகழ்பெற்ற நடிகர் கார்த்திக். தற்போது வயது காரணமாக படங்களில் நடித்து வருவதை தவிர்த்து வரும் அவர் முன்னதாக தொடங்கிய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் உடல்நல குறைவு காரணமாக நடிகர் கார்த்திக் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூச்சுத்திணறல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.