Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாம் தமிழர் கட்சியின் கருப்பு விவசாயி சின்னம் பெற்ற கட்சி தமிழகத்தில் போட்டி.. சீமான் அதிர்ச்சி..!

Siva
வியாழன், 14 மார்ச் 2024 (08:30 IST)
நாம் தமிழர் கட்சியின் சின்னமான கரும்பு விவசாயி என்ற சின்னத்தை தேர்தல் ஆணையம் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி என்ற கட்சிக்கு வழங்கி விட்டது என்பது தெரிந்தது. 
 
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீமான் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் நீதிமன்றத்திலும் சீமானுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கவில்லை. இதனை அடுத்து சீமான் வேறு சின்னத்தை தேர்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னத்தை பெற்ற கர்நாடகா மாநிலத்தின் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி தற்போது தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. வேட்பாளர் பட்டியலை இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிப்போம் என்று இந்த கட்சியின் தமிழகத்தின் பொறுப்பாளர் அனு பாஸ்கர் என்பவர் தெரிவித்துள்ளார் 
 
நாம் தமிழர் சின்னமான கரும்பு விவசாயி சின்னத்தை பெற்ற பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு நாம் தமிழர் கட்சியின் தொண்டர்களே மாறி ஓட்டுப் போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் சீமான் கடும் அதிர்ச்சியில்  இருப்பதாக கூறப்படுகிறது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments