Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்து கடவுள்கள் குறித்து ஆசிரியர் அவதூறு! – மாணவி புகார்!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (13:43 IST)
கன்னியாக்குமரியில் இந்து கடவுகள் குறித்து அவதூறாக ஆசிரியர் பேசியதாக மாணவி கூறும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாக்குமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் அந்த சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 300க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்பள்ளியில் தையல் ஆசிரியராக பணி புரியும் பெண், இந்து மத மாணவிகளிடம் இந்து கடவுள்கள் குறித்து அவதூறாக பேசுவதாகவும், கிறிஸ்தவ மத பிரார்த்தனைகளை கூறி திரும்ப சொல்ல சொல்லி வற்புறுத்துவதாகவும் மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து பெற்றோர்கள் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீஸார் பள்ளி தலைமை ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தலைமை ஆசிரியர் முன்பு மாணவி ஒருவர் தையல் ஆசிரியை செயல்பாடுகள் குறித்து புகார் அளித்தார். இது வீடியோவாக வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து ஆசிரியை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாகவும், இதற்காக மாவட்ட கல்வி அலுவலர் ஒருவர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments