Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஷ்யாவில் வணிகத்தை நிறுத்திய 600 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்

ரஷ்யாவில் வணிகத்தை நிறுத்திய 600  க்கும் மேற்பட்ட  நிறுவனங்கள்
, செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (23:49 IST)
ரஷ்யாவில் 600க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை நிறுத்தியுள்ளன
 
அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பிறகு, 600க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் வணிகத்தை மொத்தமாக மூடியுள்ளன அல்லது குறைத்துள்ளன.
 
ரஷ்ய படையெடுப்பு தொடக்கத்திலிருந்து, யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 1000 க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்களை ஆய்வு செய்தனர்.
 
இந்த ஆய்வில், பல நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறியுள்ளன, ஆனால் சில மேற்கத்திய நிறுவனங்கள் இன்னும் ரஷ்யாவில் தங்கள் வணிகத்தை வழக்கமான முறையில் செய்து வருகின்றன என தெரியவந்துள்ளது.
 
ரஷ்யாவில், நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை குறைத்த அளவிற்கு ஏற்ப ஆய்வில் தரவரிசை செய்யப்பட்டன. அதன்படி ஹெய்ன்கென்(Heineken) முதல் நெட்ஃபிலிக்ஸ்(Netflix) வரையான நிறுவனங்கள் ரஷ்யாவிலிருந்து முற்றிலும் வெளியேறிய நிறுவனங்களாக உள்ளதால் "ஏ" பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
 
மேலும், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் (Emirates Airlines) மற்றும் ஜேடி.காம்(JD.com) போன்ற நிறுவனங்கள் "எஃப்" பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த நிறுவனங்கள் ரஷ்யாவில் வழக்கம்போல இயங்கி வருகின்றன.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏப்ரல் 16 ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை- - தமிழக அரசு