Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் கவலைக்கிடம்

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் கவலைக்கிடம்
, வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (16:50 IST)
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி எம்பியும் பிரபல தொழிலதிபருமான வசந்தகுமார் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் 
 
இந்த நிலையில் அவரது உடல்நிலை கடந்த சில நாட்களாக சீராக இருந்த நிலையில் திடீரென இன்று கவலைக்கிடமாக இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது
 
சற்றுமுன் மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து வெளி வந்த தகவலின் படி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது தந்தையின் உடல் நிலை சீராக இருப்பதாக அவரது மகன் நடிகர் விஜய் வசந்த் தெரிவித்திருந்தார். மேலும் தனது தந்தைக்கு சர்க்கரை நோய் இருப்பதாகவும் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் கவலைக்கிடமாக இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் அவரது குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மது குடித்துவிட்டு தகராறு... இளைஞர் முகத்தில் வெந்நீரை ஊற்றிய இளம் பெண்...