2ஜி வழக்கின் தீர்ப்பையடுத்து கனிமொழி, ராசா ஆகிய இருவரும் இன்று சென்னை திரும்பினர்.
நாடெங்கும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜி வழக்கில் ஆர்.ராசா, கனிமொழி உட்பட அனைவரையும் விடுவித்து டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறி விட்டது எனக்கூறிய நீதிபதி ஓ.பி.சைனி, இந்த வழக்கில் தொடர்புடைய 14 பேரும் விடுதலை செய்யப்பட்டதாக அறிவித்தார்.
இந்த தீர்ப்பை நாடெங்கும் உள்ள திமுகவினர் மகிழ்ச்சியுடன் கொண்டானர். சென்னையில் உள்ள அறிவாலயத்திலும் மகிழ்ச்சி களை கட்டியது. அங்கு வந்த ஸ்டாலின் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
இந்நிலையில், டெல்லியிலிருந்து விமானம் மூலம் இன்று ஆர்.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் இன்று சென்னை திரும்பினர். விமான நிலையத்தில் திமுகவினர் திரண்டு வந்து அவர்கள் இருவருக்கும் உற்சாக வரவேற்பளித்தனர்.
அதன்பின் கோபலபுரம் வீட்டிற்கு வந்த கனிமொழி, அவரது சகோதரரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினை கட்டியணைத்து கண்ணீர் விட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்த நிகழ்வு அங்கிருந்த திமுகவினருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.