Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எதற்கெல்லாம் கற்றாழை ஜெல் பயன்படுகிறது தெரியுமா!

எதற்கெல்லாம் கற்றாழை ஜெல் பயன்படுகிறது தெரியுமா!
கற்றாழை மருந்துப் பொருளாகவும், அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகிறது. பச்சை நிறத்தில் காணப்படும் கற்றாழை முட்களுடன் காணப்படும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி, முகம் பளிச்சிடவும் கற்றாழையில் உள்ள ஜெல் போன்ற  திரவம் பயன்படுகிறது.
கற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் ஜெல் சருமத்திற்கு பாதுகாப்பதாக கருதப்படுகிறது. சூரிய ஒளியுடன் கலந்து வரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது. மேலும் சருமத்தின் ஈரத்தன்மையை காத்து சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்துகிறது.
 
இது ஒரு கசப்பு தன்மையைக் கொண்டதால் கூடுதல் பலன் அளிக்கும் இயற்கை மருந்துப் பொருளாக உள்ளது. இந்தக்  கற்றாழையின் மூலம் பல நோய்கள் குணமடைகின்றன. கற்றாழையை நன்றாகத் தோல் சீவி, ஆறேழு முறை நீரில் நன்றாகக் கழுவிக்கொள்ளவும். அதனுடன் தேன் அல்லது பனைவெல்லம் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து ஜூஸாக சாப்பிட்டால்,  மாதவிடாய் வயிற்றுவலி குறையும்.
 
தோல் அரிப்புக்கு, கற்றாழை ஜெல்லை தடவிவர, அரிப்பு குணமாகும். வெயில் காலங்களில் அடிக்கடி கற்றாழை ஜெல்லைப்  பயன்படுத்தி முகம், கை, கால்களைக் கழுவினால், சூரிய ஒளியில் இருந்து தோலைப் பாதுகாக்க உதவும். ஆன்டி ஏஜிங்காகவும் கற்றாழை செயல்படும்.
 
கற்றாழை ஜெல்லோடு தேன் சேர்த்து வாரத்துக்கு ஒரு முறை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், முகம் பொலிவடையும். கரும்புள்ளிகள், சுருக்கங்கள், முகப்பருவினால் ஏற்படும் அழற்சிகள் நீங்கும். கற்றாழையின் சதைப்பகுதியை  தண்ணீரில் நன்றாகக் கழுவி, உதட்டில் தடவ உதடு வறண்டு போகாமல் இருக்கும்.
 
முகத்துக்கு பூசும் கிரீம்கள், நகத்துக்கு பூசும் நகப்பூச்சு பொன்றவை இந்த கற்றாழையில் இருந்துதான் பெறப்படுகிறது.  முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சருமநோய் எதுவாக இருந்தாலும் சிறிது  கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.
 
சோற்றுக் கற்றாழையில் உடலுக்குத் தேவையான விட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் அனைத்தும் உள்ளன. இதை ஒரு சர்வரோக நிவாரணி என்று கூட அழைக்கலாம். உடலுக்குத் தேவையான நேரம் எதிர்ப்பு சக்தியை கற்றாழை வழங்குகிறது.
 
நீடித்த மலச்சிக்கலை போக்கவும், வாய்வுத் தொல்லையை நீக்கவும், வயிற்றின் சூட்டை தடுக்கவும், தீராத வயிற்று புண்ணை  நீக்கவும் கற்றாழை பயன்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பயனுள்ள எளிய இயற்கை வைத்தியங்கள் சில...!