Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண் ஓட்டுனரின் ஆட்டோவில் பயணம் செய்த கனிமொழி!

Advertiesment
கனிமொழி
, புதன், 23 டிசம்பர் 2020 (20:56 IST)
பெண் ஓட்டுனரின் ஆட்டோவில் பயணம் செய்த கனிமொழி!
திமுக எம்பி கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் அரசியல் கருத்துக்கள் மட்டுமின்றி பெண்கள் குறித்த ஆக்கபூர்வமான கருத்துக்களையும் அவ்வப்போது பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. 
 
அந்த வகையில் தற்போது கனிமொழி எம்பி அவர்கள் பெண் ஆட்டோ டிரைவர் ஒருவரின் ஆட்டோவில் பயணம் செய்தது குறித்து புகைப்படங்களுடன் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:
 
காந்திமதியுடன் அவரது ஆட்டோவில் பயணித்த போது அவருடன் உரையாடினேன்.அவர் தனது வருவாயில் தன் குடும்பத்தை நிர்வகிக்கும் உறுதியான பெண்.இரவு தாமதமாக வேலைசெய்யும் பெண்களின் போக்குவரத்திற்கு உதவுகிறார்.மகிழ்ச்சி ததும்பும் அந்த முகம் அதற்குப்பின்னால் இருக்கும் வலிகளை வெளிபடுத்தவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போலீஸ் அதிகாரி முகத்தில் சுடுதண்ணீரை ஊற்றிய பெண் !