Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏழை வியாபாரிகளின் பழங்களை தூக்கி எறிந்த ஆணையர்: கண்டனம் தெரிவித்த கனிமொழி

ஏழை வியாபாரிகளின் பழங்களை தூக்கி எறிந்த ஆணையர்: கண்டனம் தெரிவித்த கனிமொழி
, புதன், 13 மே 2020 (08:09 IST)
ஏழை வியாபாரிகளின் பழங்களை தூக்கி எறிந்த ஆணையர்
வாணியம்பாடி பகுதிகளில் ஏழை வியாபாரிகள் சிலர் தள்ளுவண்டிகளில் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்த நிலையில் அந்த தள்ளுவண்டியில் உள்ள பழங்களை தூக்கி எறிந்தும், தள்ளுவண்டிகளை கவிழ்த்தும் ஆணையர் நடந்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்த திமுக எம்பி கனிமொழி அவர்கள் ’வாணியம்பாடி ஆணையரின் இந்த மனிதத் தன்மையற்ற செயலை வன்மையாக கண்டிக்கிறேன் என்றும் ஏழைகள் என்றால் அவ்வளவு இளக்காரமா என்றும் ஏழைகளிடம் மட்டுமே இவர் போன்ற அதிகாரங்கள் அத்துமீறும் என்றும் எச்சரிக்கை செய்வதை விட்டுவிட்டு இப்படி உணவு பொருட்களை கொட்டி தவிர்க்க இவர்களுக்கு அதிகாரம் தந்தது என்றும் இவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
இந்த நிலையில் தன் மீதான தன் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலளித்தல் வாணியம்பாடி நகராட்சி ஆணையர் ’சென்னை கோயம்பேடு மார்க்கெட் போல் பொருளாதார சமூக தொற்றாக பல்வேறு பகுதிகளில் பரவக் கூடிய நிலை வாணியம்பாடியில் ஏற்படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான் இந்த செயலை செய்தேன் என்றும் பலமுறை பலரிடம் எச்சரிக்கை செய்தும் அவர்கள் மீண்டும் மீண்டும் கடை போட்டதால் தான் இந்த மாதிரி செய்ய நேரிட்டது என்றும் எனினும் தனது செயலுக்காக வருந்துகிறேன் என்றும் ஆணையர் தெரிவித்துள்ளார் 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆன்லைனிலும் மது விற்க கூடாது: நாம் தமிழர் கட்சி மேல்முறையீடு