தமிழக அரசின் இயலாமையை கனிமொழி எம்பி ஒப்புக்கொண்டார் என மத்திய அமைச்சர் எல். முருகன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நடந்த வான் சாகச நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்த கனிமொழி எம்பி, "இதுபோன்று அதிக நபர்கள் கூடும் நிகழ்ச்சியை இனி தவிர்க்கலாம்" என்று கூறியிருந்தார்.
இதனை அடுத்து, தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மத்திய இணை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியபோது, "சென்னையில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது. விமானப்படை அதிகாரிகள் தமிழக அரசிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், அதற்கேற்றபடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை" என்றும் தெரிவித்தார்.
விமான கண்காட்சிக்கு ஏற்ப சமாளிக்க முடியாத கூட்டத்தை தவிர்த்திருக்கலாம் என்று கனிமொழி எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவிக்க, "இது தமிழக அரசின் இயலாமையை ஒப்புக்கொள்வதாகும்" என மத்திய அமைச்சர் எல். முருகன் வரவேற்றார்.