Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு... அஜித் & ஷாலினியின் க்யூட் வீடியோ!

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு... அஜித் & ஷாலினியின் க்யூட் வீடியோ!

vinoth

, திங்கள், 7 அக்டோபர் 2024 (14:54 IST)
அஜித் மற்றும் ஷாலினி ஆகிய இருவரும் அமர்க்களம் படத்தில் நடித்த போது காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்டனர். அதன் பிறகு ஷாலினி சினிமாவில் இருந்து விலகி பேட்மிண்ட்டன் விளையாட்டில் கவனம் செலுத்தினார். இந்த தம்பதிகளுக்கு அனோஸ்கா மற்றும் ஆத்விக் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.

திருமணம் ஆகி 23 ஆண்டுகள் வெற்றிகரமாக கடந்துள்ளனர். அஜித் கடந்த சில ஆண்டுகளாகவே பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. அதுபோல எந்த சோஷியல் மீடியாவிலும் அவர் இல்லை. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஷாலினி அஜித் இன்ஸ்டாகிராமில் இணைந்தார். அதன் பின்னர் அவர் தன் குடும்பத்தினரோடு இருக்கும் புகைப்படங்களை எல்லாம் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது அஜித் மற்றும் ஷாலினி ஆகியோர் அஜித்தின் குட் பேட் அக்லி ஷூட்டிங்குக்காக ஸ்பெயினில் முகாமிட்டுள்ளனர். இதையடுத்து இருவரும் ஜோடியாக ஸ்பெயின் வீதிகளில் ஜாலியாக நடந்து செல்லும் செல்ஃபி வீடியோவை ஷாலினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யா 44 ஷூட்டிங் ஓவர்… முழுக் கவனமும் கங்குவா மேலதான்… ஆடியோ ரிலீஸ் எப்போது?