தூத்துக்குடியிலும் தேர்தலை ரத்து செய்யவே இந்த சோதனை: கனிமொழி

Webdunia
செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (23:07 IST)
பணப்பட்டுவாடா செய்வதாக வெளிவந்த புகாரை அடுத்து வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில் தூத்துகுடி திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருந்த வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
இந்த சோதனை சற்றுமுன் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இந்த சோதனை குறித்து கனிமொழி கூறியபோது, 'சோதனையில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக வேட்பாளர்கள் மீது கலங்கம் ஏற்படுத்தவே இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் வேலூரில் தேர்தலை ரத்து செய்தது போல் தூத்துக்குடியிலும் தேர்தலை ரத்து செய்யவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்கள் என்று கனிமொழி கூறினார்.
 
தூத்துக்குடி குறிஞ்சிநகர் பகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருந்த வீட்டில் 2 மணி நேரமாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை சற்றுமுன் நிறைவு பெற்றுள்ளதாகவும், கனிமொழியை ஆஜராகும்படி வருமான வரித்துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மாடிரி ரஜினி கையைக் கட்டிக்கிட்டு நின்னாரா?!.. ஆதவ் அர்ஜுனாவை பொளக்கும் எஸ்.வி.சேகர்!..

ஓட்டு வரும்.. சீட்டு வராது!. என்.டி.ஏ கூட்டணிக்கு போங்க!.. விஜய்க்கு அட்வைஸ்!...

அதிமுக - பாஜகவுடன் தவெக கூட்டணியா?.. சி.டி.நிர்மல் குமார் முக்கிய தகவல்..

காக்கா குஞ்சுக்கெல்லாம் பதில் சொல்ல வச்சிட்டீங்க!.. போஸ்டர் ஒட்டிய ரஜினி ரசிகர்கள்!..

லூசு பசங்களா?... அறிவு இருக்கா இல்லையா?!.. ஆதவ் அர்ஜுனாவை பொளக்கும் எஸ்.வி.சேகர்!..

அடுத்த கட்டுரையில்
Show comments