Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்ரீதேவி வழக்கு முடித்து வைப்பு; அடுத்து உடல் எம்பாமிங்

ஸ்ரீதேவி வழக்கு முடித்து வைப்பு; அடுத்து உடல் எம்பாமிங்
, செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (16:28 IST)
நடிகை ஸ்ரீதேவி, உறவினர் ஒருவரின் திருமண விழாவில் கலந்து கொள்ள துபாய் சென்ற போது கடந்த சனிக்கிழமை இரவு மரணமடைந்தார். மாரடைப்பின்  காரணமாக அவர் மரணமடைந்ததாக முதலில் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் அவரது பிரேத பரிசோதனையில், உடலில் ஆல்கஹால் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, மது போதையில் இருந்த அவர்  குளியலறையில் இருந்த தொட்டியில் மயங்கி விழுந்து, நீரில் மூழ்கி மூச்சுத் திணறி இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 
 
ஸ்ரீதேவியின் மரணத்தில் துபாய் போலீசாருக்கு சில சந்தேகங்கள் இருப்பதால், அதுபற்றி அவரின் கணவர் போனி கபூரிடம் அவர்கள் விசாரனை நடத்தி  வருகின்றனர். அனைத்து விசாரணையும் முடிந்த பின்பே, அவரை உடலை பதப்படுத்தி இந்தியா எடுத்து செல்ல முடியும் எனக் கூறப்பட்டது. 
 
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டுவர, அனில் அம்பானியின் 13 இருக்கைகள் கொண்ட தனி ஜெட் விமானம்  துபாய் விரைந்தது. எனவே அன்று இரவே ஸ்ரீதேவியின் உடல் இந்தியா வரும் என கூறப்பட்டது. ஆனால் மருத்துவ பரிசோதனை, துபாய் அரசியல் சட்டமுறை  உடற்கூறு ஆய்வு உள்ளிட்ட காரணங்களால் தாமதம் ஏற்பட்டது. இதனால் நேற்று வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரீதேவியின் உடல், வரவில்லை. 

இந்நிலையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில்தான் ஸ்ரீதேவியின் உடல், அவரது கணவர் போனி கபூரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்ரீதேவியின்  உடலுக்கு எம்பாமிங் செய்யப்படவுள்ளது. பின்னர்தான் அவரது உடல் மும்பை வரும் என்று கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யை பாலோ செய்கிறாரா அஜித்?