Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் இசையும் சொற்பொழிவும் கலந்த கம்ப இராமாயணம்! - ரேலா மருத்துவமனை ஏற்பாடு!

Ramayanam
, வெள்ளி, 22 நவம்பர் 2024 (12:30 IST)

புரொஃபசர் முகமது ரேலா மற்றும் டாக்டர். பிரியா ராமச்சந்திரன் ஆகியோர் கம்ப இராமாயண பாடல் வரிகளை தமிழில் வாசித்து அவைகளுக்கான பொருள் விளக்கத்தை ஆங்கில மொழியில் வழங்குவார்கள்; அந்த பாடல் வரிகளை கர்நாடக சங்கீத வடிவில் இசைப்பாடலாக திரு. சிக்கில் குருசரண் வழங்குவார்.

 

 

“கம்ப இராமாயணம் – கவிதையும் பாடலும்” (முக்கிய நிகழ்வு) 2024 நவம்பர் 23 (சனிக்கிழமை) மாலை 6:00 மணியிலிருந்து நாரத கான சபா அரங்கில் நடைபெறவிருக்கிறது. கட்டணமேதுமின்றி பொதுமக்கள் இதில் பங்கேற்கலாம்.

 

 

 

பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்ற காவியமான கம்ப இராமாயணத்திலிருந்து கவிதை வரிகளை வாசித்தல், அவை குறித்து ஆங்கிலத்தில் சொற்பொழிவுகள் மற்றும் தேர்வு செய்த பாடல் வரிகளை இசை வடிவில் வாய்ப்பாட்டாக வழங்குதல் ஆகியவற்றின் கலவையாக கம்ப இராமாயண நிகழ்ச்சி ஒன்றை சென்னையில் ரேலா மருத்துவமனை வழங்கவிருக்கிறது. பொதுமக்கள் பங்கேற்பிற்காக நவம்பர் 23-ம் தேதியன்று, நாரத கான சபா அரங்கில் நடைபெறும் இந்நிகழ்வு, தமிழுக்கு அழகு சேர்க்கின்ற கம்ப இராமாயணம் இன்னும் பலரை சென்றடைவதை இலக்காக கொண்டிருக்கிறது, கம்ப இராமாயணத்தை பல்வேறு தரப்பைச் சேர்ந்த பார்வையாளர்களும் சுவைத்து மகிழ இது வழிவகுக்கும்.

 

 

 

புரொஃபசர் முகமது ரேலா மற்றும் டாக்டர். பிரியா ராமச்சந்திரன் ஆகியோர் கம்ப இராமாயண பாடல் வரிகளை தமிழில் வாசித்து அவைகளுக்கான பொருள் விளக்கத்தை ஆங்கில மொழியில் வழங்குவார்கள்; அந்த பாடல் வரிகளை கர்நாடக சங்கீத வடிவில் இசைப்பாடலாக பல்வேறு ராகங்களில் திரு. சிக்கில் குருசரண் வழங்குவார். 90 நிமிடங்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 14 பாடல்கள் இடம்பெறுகின்றன; கம்பனின் அற்புதமான படைப்பின் சாரத்தையும், பொருள் விளக்கத்தையும் இசையோடு ஒருங்கிணைக்கின்ற அனுபவமாக இது இருக்கும்.

 

 

 

ரேலா மருத்துவமனையின் தலைவரும், நிர்வாக இயக்குனரும் மற்றும் உலகளவில் புகழ்பெற்ற கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை நிபுணருமான புரொஃபசர் முகமது ரேலா அவர்கள், கம்ப இராமாயணத்திலும் சிறப்பான புலமை பெற்றவர். ரேலா மருத்துவமனையில் குழந்தைகளுக்கான அறுவைசிகிச்சை துறையின் முதுநிலை நிபுணரான டாக்டர். பிரியா ராமச்சந்திரன், கம்ப இராமாயணப் பாடல்களில் நிபுணர் என அறியப்படுகிறார். இந்திய கர்நாடக வாய்ப்பாட்டு கலைஞரான திரு. சிக்கில் குருசரண், கர்நாடக சங்கீதத்தில் இளம் தலைமுறையினரின் தூதராக புகழ்பெற்றிருக்கிறார்.

 

 

 

இச்சிறப்பான நிகழ்வு குறித்து விளக்குவதற்காக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய புரொஃபசர் முகமது ரேலா, “கம்பர் இயற்றிய 10,500 கவிதை வரிகளை கொண்ட கம்ப இராமாயணம், மிக அற்புதமான இலக்கிய பெருங்காவியமாகும். தமிழில் எழுதப்பட்ட இக்காவியத்தின் வரிகள் தமிழில் வாசிக்கப்படும். அதன் செழுமையை அனுபவிக்க இயலாதவர்களுக்காக ஆங்கிலத்தில் விளக்கி கூறப்படும் மற்றும் பொதுமக்களுக்கு இசை வடிவிலும் பல்வேறு ராகங்களில் வழங்கப்படும். கவிதையையும், இசையையும் நேசித்துப் பாராட்டுகின்ற அனைத்து ரசிகர்களும் கம்ப இராமாயணத்தின் சுவையை ருசிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு தமிழ் பேசும் பார்வையாளர்கள் என்ற வரம்பையும் கடந்து, பிற மொழிகள் பேசுபவர்களுக்கு கம்ப இராமாயணத்தைக் கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கமாகும். கம்ப இராமாயணத்தின் நிகரற்ற அழகையும், ஆழத்தையும் வெளிக்கொணர்வதற்கு டாக்டர். பிரியா ராமச்சந்திரன் மற்றும் சிக்கில் குருசரண் ஆகியோரோடு இந்நிகழ்வில் இணைந்து செயல்படுவதில் நான் பெரும் உற்சாகம் கொள்கிறேன். கடந்த காலத்தில் பல இலக்கிய நிகழ்வுகளில் டாக்டர். பிரியாவும், நானும் இணைந்து பங்கேற்றிருக்கிறோம். கர்நாடக இசை உலகில் தனக்கென சிறப்பிடத்தைக் கொண்டிருக்கும் திரு. சிக்கில் குருசரண், அவரது இசை ஞானத்தால் கம்ப இராமாயண பாடல் வரிகளுக்கு உயிரூட்டுவார் என்பது நிச்சயம். காலத்தைக் கடந்து வாழ்கின்ற தமிழின் இப்பெருங்காவியத்தை புதிய வடிவில் வழங்குவதன் மூலம் செழுமையான, மறக்க இயலாத இனிய அனுபவத்தை வழங்குவதை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.” என்று கூறினார்.

 

 

 

இந்நிகழ்வில் பேசிய டாக்டர். பிரியா ராமச்சந்திரன், “இந்த ஆண்டு தொடக்கத்தில் நமது மாண்புமிகு பிரதமர் திரு. மோடி அவர்கள் ஸ்ரீரங்கத்திற்கு வருகை தந்தபோது கம்பனின் பாடல் வரிகளை திரு, சிக்கில் குருசரணும், நானும் இசை வடிவில் வழங்கினோம்; அதைத் தொடர்ந்து ஆங்கிலத்தில் அதன் பொருள் விளக்கத்தை தந்தோம். இந்நிகழ்வு மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றது. இப்போது இதே இனிய அனுபவத்தை சென்னையில், அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு வழங்கவும், கம்பனின் கவிதை நயத்தின் அழகு குறித்து பெரிய அளவிலான விழிப்புணர்வை உருவாக்கவும் நாங்கள் ஆர்வத்தோடு இருக்கிறோம். சென்னையில் நடைபெறும் இந்நிகழ்வில் புரொஃபசர் முகமது ரேலா அவர்களும் எங்களோடு இணைந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சிறு வயதிலிருந்தே தமிழ் இலக்கியத்தில், அதுவும் குறிப்பாக கம்ப இராமாயணம் மீது ஆழமான பேரார்வம் கொண்டவராக அவர் தொடர்ந்து இருந்து வருகிறார். உறுப்புமாற்று சிகிச்சை நிபுணராக ஓய்வின்றி பணியாற்றி வருகிற போதிலும் கூட, தமிழ் மொழி கவிதை மற்றும் இலக்கியம் மீதான அவரது காதலை அவர் தொடர்ந்து வளர்த்து வந்திருக்கிறார். இந்நிகழ்வில் புரொஃபசர் முகமது ரேலா அவர்களும் இணைந்து பங்கேற்பது இந்நிகழ்ச்சியை மேலும் ஆழமானதாக, அதிக தாக்கம் ஏற்படுத்துவதாக கூடுதல் மதிப்பு சேர்க்கும் என்பது நிச்சயம்.” என்று கூறினார்.

 

 

 

இந்நிகழ்வு குறித்து திரு. சிக்கில் குருசரண் பேசுயைில், “கம்ப இராமாயணம் என்ற ஈடு இணையற்ற தமிழ் காவியத்தை புதிய மற்றும் புதுமையான வடிவத்தில் வழங்குவதற்கு டாக்டர். பிரியா ராமச்சந்திரன் மற்றும் புரொஃபசர் முகமது ரேலா அவர்களுடன் இணைவதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். எங்களது தனிப்பட்ட நிபுணத்துவ செயல்தளங்கள் வேறுபட்டிருப்பினும், இந்த காவியத்தின் மீதான அன்பும், மரியாதையுமே எங்களை ஒருங்கிணைத்திருக்கிறது. கம்ப இராமாயண காவியம் மீது டாக்டர். பிரியாவின் மிக ஆழமான பேரார்வமும், ஒருங்கிணைந்து தனித்துவமான சக்தியை உருவாக்கும். கம்ப இராமாயணத்தின் கவிதை வரிகளை சுவைபட விளக்கும் அவர்களது உரைகளும் மற்றும் கர்நாடக இசையின் பல்வேறு ராகங்களில் அவைகளை பாடுவதும் இந்நிகழ்வில் பங்கேற்கும் பார்வையாளர்களுக்கு ஒரு பன்முக அனுபவத்தை வழங்கும்.” என்று கூறினார். 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியை சந்தித்ததே அரசியல்தான்.. அரசியலுக்காகதான்! - சீமான் குடுத்த ட்விஸ்ட்!