Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தீவிர ஸ்ட்ரோக் / பக்கவாத பாதிப்புக்கான சிகிச்சைக்கு 24/7 கேத் லேப் – ஐ தொடங்கும் ரேலா மருத்துவமனை

Advertiesment
Rela Hospital

Prasanth Karthick

, செவ்வாய், 29 அக்டோபர் 2024 (13:07 IST)

நோயறிதலுக்காக நவீன இமேஜிங் தொழில்நுட்பத்தை இந்த லேப் கொண்டிருக்கிறது; சிக்கலான சிகிச்சைகளுக்கு விரைவான சிகிச்சையை உறுதிசெய்யும் மூளை நரம்பியல் இடையீட்டு சிகிச்சை மருத்துவர்களின் அர்ப்பணிப்பு மிக்க ஆதரவோடு இந்த லேப் இயங்கும்.

 

 

 

சென்னை, அக்டோபர் 28, 2024: தீவிர ஸ்ட்ரோக் / பக்கவாத பாதிப்புகளுக்கான சிகிச்சையில் நரம்புக்குழாய் மற்றும் இடையீட்டு கதிர்வீச்சியல் செயல்முறைகளுக்கு ஆதரவளிக்க ஒரு மிக நவீன 24/7 கேத் லேப் – ஐ தமிழ்நாட்டின் பிரபல மருத்துவமனையான ரேலா மருத்துவமனை நிறுவியிருக்கிறது.  தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் காவல்துறை தலைவர் டாக்டர். சைலேந்திர பாபு, ஐபிஎஸ் (ஓய்வு), ரேலா மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் புரொஃபசர் முகமது ரேலா  அவர்களது முன்னிலையில் இந்த கேத் லேப் – ஐ தொடங்கி வைத்தார்.

 

 

 

நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கான நவீன இமேஜிங் தொழில்நுட்பத்தை இந்த லேப் கொண்டிருக்கிறது; சிக்கலான சிகிச்சைகளுக்கு விரைவான சிகிச்சையை உறுதிசெய்யும் மூளை நரம்பியல் இடையீட்டு சிகிச்சை மருத்துவர்களின் அர்ப்பணிப்பு மிக்க ஆதரவோடு இந்த லேப் இயங்கும். இந்த புதிய கேத் லேப் – ல் மேற்கொள்ளப்பட்டவுள்ள சில முக்கியமான செயல்முறைகளுள் கீழ்க்கண்டவை உள்ளடங்கும்; உறைவுக்கட்டிகளை அகற்றவும் மற்றும் மூளைக்கு இரத்தஓட்டத்தை மீண்டும் ஏற்படுத்தவும் (மெக்கானிக்கல் த்ராம்பெக்டாமி),இயந்திர இயக்க இரத்த குழாய் உறைவுத்துகள் நீக்கம், குருதிநாள அழற்சி மேலாண்மை மற்றும் கிழிசல் நிகழாமல் தடுக்க இரத்தஓட்ட வழிதிருப்பிகளுடன் குருதிநாள சுருளாக்கம், இயல்புக்கு மாறான இரத்தநாளங்களுக்கு சிகிச்சையளிக்க தமனிச்சிரை பிறழ்வுகளில் இரத்தநாள தடுப்பு.  இவைகளுக்கும் கூடுதலாக, இரத்தநாளம் சார்ந்த புற்றுக்கட்டிகளில் இரத்தஓட்டத்தை தடுப்பதற்கான செயல்முறையையும் குறிப்பிட்ட புற்றுக்கட்டிகளுக்கான இரத்தஓட்டத்தைக் குறைப்பதற்கும் மற்றும் கடுமையான இரத்தநாள குறுக்க பாதிப்புகளில் ஸ்டென்ட் பொருத்துவதற்கும், பக்கவாதம் மீண்டும் நிகழாமல் தடுக்க உதவ, குறுகியிருக்கும் கரோட்டிட் தமனி மற்றும் மூளைக்குள் நாளங்கள் பிரச்சனையை சரிசெய்வதற்கும் இந்த லேப் பயன்படுத்தப்படும். 

 

 

 

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29-ம் தேதியன்று அனுசரிக்கப்படும் உலக பக்கவாத / ஸ்ட்ரோக் தின நிகழ்வையொட்டி இந்த கேத் லேப் – ன் தொடக்கமும் அமைந்திருக்கிறது.  இந்த ஆண்டு உலக பக்கவாத தின அனுசரிப்பின் கருப்பொருளாக “பக்கவாத சிகிச்சைக்கான அணுகுவசதி – #பொன்னான நேரத்தை மிச்சப்படுத்துவோம்” என்பது தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.  பக்கவாதத்தின் சேதத்தைக் குறைப்பதற்காக மிக விரைவாக பதில்வினையாற்றுவது மற்றும் சிகிச்சைகளுக்கான அணுகுவசதியை உறுதிசெய்வதன் முக்கியத்துவத்தை இக்கருப்பொருள் வலியுறுத்துகிறது. 

 

 

 

இந்நிகழ்வில் உரையாற்றிய தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் காவல்துறை தலைவர் டாக்டர். சைலேந்திர பாபு, ஐபிஎஸ் (ஓய்வு), “தீவிர பக்கவாத பாதிப்பிற்கும் மற்றும் பக்கவாதத்துடன் இரத்தநாள பாதிப்புகளுக்கும் மேம்பட்ட சிகிச்சையை வழங்க மருத்துவர்களை ஏதுவாக்குகின்ற நவீன தொழில்நுட்பத்தை இந்த கேத் லேப் மூலம் ரேலா மருத்துவமனை அறிமுகம் செய்வது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.  பக்கவாத பாதிப்பிலிருந்து மீண்டு குணமடைவதற்கு மிகச்சிறந்த வாய்ப்பை நோயாளிகளுக்கு இந்த கேத் லேப் தரும் என்று நான் அறிகிறேன்.  இருப்பினும், பக்கவாதம் ஏற்பட்ட பிறகு சிகிச்சையின் மூலம் குணப்படுத்துவதை விட அது வராமல் தடுப்பதே சிறந்தது.  இரத்தஅழுத்தம், நீரிழிவு, அதிக கொலஸ்ட்ரால், உடற்பருமன் போன்ற இடர்க்காரணிகளை முறையாக நிர்வகிப்பதன் வழியாகவும் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை விருப்பத்தேர்வுகளை கடைப்பிடிப்பதன் மூலம், 80% பக்கவாத பாதிப்புகள் வராமல் தடுக்கமுடியும் என்று புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.  எனவே, உடல்சார் உழைப்பு அல்லது உடற்பயிற்சிகளில் மக்கள் ஆர்வத்தோடு தவறாமல் ஈடுபடு வேண்டும்.  இந்நடவடிக்கைகள் என்பவை: நடைபயிற்சி, ஓட்டம், சைக்கிள் ஓட்டுவது அல்லது விளையாட்டு நிகழ்வில் பங்கேற்பது என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.  ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது முக்கியம்.  உடல்சார்ந்த செயல்பாடுகளும், உடற்பயிற்சிகளும் பக்கவாதத்திற்கான இடர்வாய்ப்பை குறைப்பதுடன், உடற்தகுதியையும், மனநலத்தையும் மேம்படுத்துகின்றன என்பதை நாம் உணரவேண்டும்.” என்று வலியுறுத்தினார்.

 

ரேலா மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் புரொஃபசர் முகமது ரேலா, அவரது உரையில் கூறியதாவது: “இந்தியாவில் 60 வயதிற்கு மேற்பட்ட நான்கு நபர்களில் ஒருவர் பக்கவாத பாதிப்பு ஏற்படும் இடர்வாய்ப்பில் இருக்கிறார்.  நமது உடலில் தமனி சுவர்களிலும் மற்றும் அவைகளின் மீதும் கொழுப்புகள், கொலஸ்ட்ரால் மற்றும் பிற படிமங்கள் அதிகமாக சேர்வதால், வயதான நபர்கள் பக்கவாதத்திற்கான பாதிப்பில் பெரும்பாலும் இருக்கின்றனர். பெரும்பாலும் இரத்தஉறைவை அதிகரிக்கின்ற நிலைகளின் காரணமாக, இளவயது நபர்களும் பக்கவாத பாதிப்பிற்கு ஆளாகுபவர்களாக இருக்கின்றனர்.  தீவிரமான பக்கவாத பாதிப்புகளுக்கான இடையீட்டு சிகிச்சையில் மேம்பட்ட தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து பயன்படுத்துவதில் நாங்கள் உறுதி கொண்டிருக்கிறோம்.  உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 15 மில்லியன் நபர்கள் பக்கவாதம் / ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்படுகின்றன.  இவர்களுள் 5 மில்லியன் நபர்கள் உயிரிழக்கின்றனர் மற்றும் மற்றொரு 5 மில்லியன் நபர்கள் நிரந்தர திறனிழப்பு பாதிப்பை எதிர்கொள்கின்றனர். இதற்கான இடையீட்டு சிகிச்சைகளைப் பொறுத்தவரை நோய் கண்டறிதலுக்கும் மற்றும் சிகிச்சையை தொடங்குவதற்கும் இடைப்பட்ட நேரத்தை குறைப்பது மீது சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.  இதுவே பக்கவாத பாதிப்பு ஏற்பட்ட நபர்களின் உயிரை காப்பாற்றும் மற்றும் நீண்டகால சேதம் / திறனிழப்பு ஏற்படாமல் தடுக்கும்.”

 

 

 

பக்கவாதத்திற்கு குறைவான, பயனளிக்கின்ற மற்றும் பாதுகாப்பான சிகிச்சையை உறுதிசெய்ய தொடங்கப்பட்டுள்ள இப்புதிய கேத் லேப், அனைத்து சாதனங்களையும் கொண்ட ஒருங்கிணைக்கப்பட்ட மையமாக இருக்கிறது என்று டாக்டர். ரேலா குறிப்பிட்டார். “அதிக தெளிவான படங்களை எடுப்பதற்கு மிக சமீபத்திய இமேஜிங் தொழில்நுட்பம் இங்கு பயன்படுத்தப்படுவதால், துல்லியமான மற்றும் பயனளிக்கின்ற இடையீட்டு சிகிச்சைகளை உடனடியாக மேற்கொள்ள முடியும்.  நோயாளிகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் கதிர்வீச்சுக்கு வெளிப்படும் இடரை கணிசமாக குறைப்பதன் மூலம் அதிக பாதுகாப்பான சிகிச்சை சூழலையும் இந்த லேப் உறுதிசெய்கிறது.  ஒரே நேரத்தில் நோயறிதல் மற்றும் சிகிச்சை திட்டமிடலை ஏதுவாக்க ஒரு பணியாற்றல் நிலையத்தையும் நாங்கள் இதில் ஒருங்கிணைத்திருக்கிறோம்.” என்று அவர் மேலும் கூறினார்.   

 

 

 

நரம்பியல் துறை, நரம்பு அறிவியல், நடமாட்டத்திறன் மற்றும் நகர்வுக்கான ரேலா மையத்தின் கிளினிக்கல் லீட் டாக்டர். சங்கர் பாலகிருஷ்ணன் இப்புதிய லேப் தொடங்கப்பட்டிருப்பது குறித்துப் பேசுகையில், “மருத்துவ முன்னேற்றங்கள், பக்கவாதத்திற்கான சிகிச்சை விளைவுகளை மிகப்பெரிய அளவில் மேம்படுத்தியிருக்கின்றன.  அதுவும் குறிப்பாக, அறிகுறிகள் தோன்றியதிலிருந்து  4.5 முதல் 6 மணி நேர காலஅளவிற்குள் சிகிச்சை தொடங்கப்படுமானால் சிகிச்சை விளைவுகள் இன்னும் சிறப்பாக இருக்கும்.  குறிப்பிட்ட சில நேர்வுகளில் அறிகுறிகள் தோன்றிய நேரத்திலிருந்து 24 மணி நேரங்களுக்குள் சிகிச்சை தொடங்கப்படுமானால், அதுவும்  பலனளிப்பதாக இருக்கிறது.  “மல்ட்டிமோடல் (பல்முகட்டு) இமேஜிங் மூலம் சரி செய்யக்கூடிய மூளைத்திசுவை எங்களால் விரைவாக அடையாளம் காணவும், துல்லியமான இடையீட்டுச் சிகிச்சையை மேற்கொள்ளவும் முடியும்.  மிக நவீன கதீட்டர்களும் மற்றும் உறிஞ்சல் சாதனங்களும் மிக குறைவான பக்க விளைவுகளுடன், இரத்தஉறைவு கட்டிகளை திறம்பட அகற்ற உதவுகின்றன; நிரந்தர பக்கவாதம் அல்லது பெரிதும் குறைந்திருக்கும் அறிவுத்திறன் செயல்பாடு போன்ற சிக்கல்களின் இடர்வாய்ப்பை இவை கணிசமாக குறைக்கும்.  ஆரம்ப நிலையிலேயே அளிக்கப்படும் சிகிச்சை, குணமடைதலை மேம்படுத்துவதோடு, பக்கவாதம் மற்றும் நீண்டகால திறனிழப்பு போன்ற சிகிச்சையளிக்கப்படாத பக்கவாதத்தின் மிக மோசமான விளைவுகள் ஏற்படாமல் தடுக்கும்.”  என்று குறிப்பிட்டார்.

 

 

 

உலக பக்கவாத தின அனுசரிப்பையொட்டி பக்கவாதம் / ஸ்ட்ரோக் வராமல் தடுப்பது, இடர்க்காரணிகள் மற்றும் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறுவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உயர்ந்த பல்வேறு செயல்திட்டங்களை ரேலா மருத்துவமனை நடத்தி வருகிறது.  சமீபத்தில் பக்க வாதத்தால் முன்பு பாதிக்கப்பட்ட நோயாளிகள் பங்கேற்ற ஒரு கிரிக்கெட் போட்டியை சென்னை மாநகரில் இது சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தியது,  ஸ்ட்ரோக் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே எப்படி கண்டறிவது மற்றும் சிகிச்சை விளைவுகளை மேம்படுத்த உரிய நேரத்திற்குள் சிகிச்சைப் பெறுவதன் முக்கியத்துவம் குறித்து கற்பிக்க களப்பணி திட்டங்களையும் இது மேற்கொள்கின்றன.  இதயத்திற்கு ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்கவும் மற்றும் குறித்த காலஅளவுகளில் உடல்நல ஸ்க்ரீனிங் சோதனைகளில் பங்கேற்கவும் B.E.F.A.S.T. மீது விழிப்புணர்வை பரப்பவும் (சமநிலை இழப்பு, கண் மாற்றங்கள், முகம் கோணல், கை பலவீனம், பேசுவதில் சிரமம் மற்றும் உடனடியாக மருத்துவ சிகிச்சையை விழைவதன் மூலம் விரைவாக செயல்படுவதற்கான நேரம்) ஆகியவற்றிற்கான உறுதிமொழியை பொதுமக்கள் ஏற்கவும் இம்மருத்துவமனை அவர்களை ஊக்குவிக்கிறது.  அதுபோலவே பக்கவாத பாதிப்பு அறிகுறிகள் இருப்பதாக ஒருவரை அடையாளம் காணும்போது சுற்றியிருப்பவர்கள் துரிதமாக செயல்படுவதன் அவசியத்தையும் ரேலா மருத்துவமனை வலியுறுத்தி வருகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!