தமிழகத்தின் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் பல கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து வருகின்றன.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாமக, உள்ளாட்சி தேர்தலை கூட்டணியின்றி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் அடுத்ததாக அமமுகவுடன் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்திருந்த தேமுதிகவும் உள்ளாட்சி தேர்தலை தனித்து எதிர்கொள்வதாக தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் தற்போது அறிவித்துள்ளார்.
அதை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனும் உள்ளாட்சி தேர்தலில் ம.நீ.ம தனித்து போட்டியிடும் என தற்போது அறிவித்துள்ளார். தொடர்ந்து பல கட்சிகள் கூட்டணிகளை கலைத்து உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.