Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஊரக உள்ளாட்சி தேர்தல் எப்போது? – இன்று மாலை அறிவிக்க வாய்ப்பு!

Advertiesment
ஊரக உள்ளாட்சி தேர்தல் எப்போது? – இன்று மாலை அறிவிக்க வாய்ப்பு!
, திங்கள், 13 செப்டம்பர் 2021 (11:03 IST)
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தும் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் அரசியல் கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு மாநில தேர்தல் ஆணையம் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் இன்று மாலை தேர்தல் தேதி மற்றும் இன்ன பிற விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய தொலைதூர க்ரூஸ் ஏவுகணையை சோதித்த வடகொரியா - தென்கொரியா ஆய்வு