Publish Date: Tue, 20 Feb 2018 (16:47 IST)
Updated Date: Tue, 20 Feb 2018 (17:08 IST)
மாணவி ஒருவர் தனது நண்பருடன் வீடியோ கால் பேசிக்கொண்டிருக்கும் போது தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹனீஷா சவுத்ரி என்ற மாணவி ஐதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வந்தார். இவர் நேற்று க்ஷீத் படேல் என்ற நண்பருடன் சமீபத்தில் திருமணத்திற்கு சென்றது பற்றி வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தார்.
இதனிடையே அவர்களுக்கு கருத்து வேறுபாடு எற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஹனீஷா தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார். அதன்படி வீடியோ காலில் பேசிக்கொண்டிருக்கும் போதே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த க்ஷீத் படேல் அவரது விடுதிக்கு சென்று அவரது உடலை இற்க்கி மருத்துவமனையில் சேர்த்தார். ஹனீஷாவை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்ததின் பெயரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.