Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பள்ளிக்கு செல்வதை தடுக்கலாம் ; நான் பாடம் கற்பதை தடுக்க முடியாது - கமல்ஹாசன் ஆவேசம்

பள்ளிக்கு செல்வதை தடுக்கலாம் ; நான் பாடம் கற்பதை தடுக்க முடியாது - கமல்ஹாசன் ஆவேசம்
, புதன், 21 பிப்ரவரி 2018 (11:19 IST)
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை இன்று மாலை ராமேஸ்வரத்தில் நடைபெறும் பிரம்மாண்ட மாநாட்டில் அறிவிக்கவுள்ளார்.

 
அதற்காக நேற்று இரவே ராமேஸ்வரம் சென்ற அவர் இன்று காலை 7.30 மணியளவில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் இல்லத்திற்கு சென்று அவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆசி பெற்றார். அதன்பின், அப்துல்கலாம் படித்த பள்ளிக்கு சென்றார். ஆனால், அங்கு செல்ல அனுமதி கிடைக்கவில்லை. அதன் பின்பு, மீனவர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.  
 
அப்போது, தங்களை பிரச்சனைகளை கேட்க வந்த கமல்ஹாசனுக்கு மீனவ நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் “அப்துல்கலாம் படித்த பள்ளிக்கு நான் செல்லக்கூடாது என தடை விதித்தனர். நான் பள்ளிக்கு செல்வதை அவர்கள் தடுக்கலாம். ஆனால், நான் பாடம் கற்பதை அவர்கள் தடுக்க முடியாது” எனக் கூறினார். மேலும், மேலும், அப்துல்கலாம் ஐயா நான் படித்த ஒரு பகுதி எனக் குறிப்பிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதுவரை காதலர், இன்று முதல் தலைவர்: கமல் குறித்து சினேகன்