Publish Date: Tue, 16 Mar 2021 (22:37 IST)
Updated Date: Tue, 16 Mar 2021 (22:41 IST)
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார் என்பதும் அவர் ஒவ்வொரு பிரச்சார மேடைகளிலும் ஆவேசமாக தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்பதும் தெரிந்தது
இந்த நிலையில் பிரச்சாரக் கூட்டமட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் தினமும் அவர் ஆக்டிவ்வாக உள்ளார் என்பதும் அவர் பதிவு செய்ய ஒவ்வொரு போய்விடும் முகத்தில் அறைந்தாற் போல் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கேடுகெட்ட அமைச்சர்கள் இந்த சாவுக்கு பொறுப்பு ஏற்பார்கள் என்று கேள்வி எழுப்பி ஒரு டுவிட்டை கமல்ஹாசன் பதிவு செய்துள்ளார் அந்த டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது
தமிழக அரசு அதிகாரிகளின் லஞ்ச கெடுபிடிகள் தாங்கமுடியாமல் எண்ணூரைச் சேர்ந்த இளம் தொழில்முனைவர் விக்ரம் முதல்வருக்குக் கடிதம் எழுதிவிட்டு பொது இடத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார் நெஞ்சம் பதறுகிறது. நான் லஞ்சப் பட்டியல் வெளியிட்டபோது மக்கள்தான் திருந்த வேண்டுமென சொன்ன கேடு கெட்ட அமைச்சர்கள் விக்ரமின் சாவுக்குப் பொறுப்பேற்பார்களா?