Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவர்கள்தான் பதில் சொல்லவேண்டும் –மி டூ குறித்து கமல் கருத்து

Webdunia
வெள்ளி, 12 அக்டோபர் 2018 (11:04 IST)
பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் இந்தியன் மி டூ குறித்த கேள்விக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாஸ்ன் பதிலளித்துள்ளார்.

பாலிவுட்டில் நடிகை தனுஸ்ரீ தத்தா நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறி இந்தியன் மி டூ வினை ஆரம்பித்து வைத்தார். இதையடுத்து இந்தியா முழுவதும் பல பாலியல் புகார்கள் வெளிவர ஆரம்பித்தன. தமிழ் நாட்டில் சின்மயி இணையதள விமர்சகர் பிரஷாந்த் மற்றும் தனது நெருங்கிய உறவினர்கள் குரித்தும் பாலியல் புகாரினை அளித்தார்.

இதையடுத்து பலப் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த பாலியல் அத்து மீறல்களை நடிகை சின்மயி மூலமாக பகிர்ந்து வருகின்றனர். இதில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக கவிஞர் வைரமுத்து, நடிகர் ராதாரவி மற்றும் நடன் இயக்குனர் கல்யாண் உள்பட பல சினிமா பிரபலங்கள் இசை நிபுனர்கள் எனப் பலரது பெயரையும் சின்மயி வெளியிட்டு வருகின்றார்.

இது தொடர்பாக அவருக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் பெருகி வருகிறது. வைரமுத்துக்கு நெருக்கமானவர்களும் சில இணைய திமுகவினரும் இது ஆண்டாள் விவகாரத்திற்கான பழிவாங்கல் நடவடிக்கை எனவும் சம்பவம் நடந்து இவ்வளவு காலம் தாழ்த்தி புகார் கொடுப்பது சம்மந்தமாகவும் சின்மயியை விமர்சித்து வருகின்றனர்.

சின்மயி மீதான வைரமுத்து ஆதரவாளர்களின் இந்த விமர்சனங்களுக்கு பெண்ணியவாதிகளிடமிருந்து பலத்த எதிர்ப்பும் கண்டனங்களும் வரத் தொடங்கியுள்ளன. இப்படி பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில் நடிகர் வைரமுத்துவின் நெருங்கிய நன்பரான கமல்ஹாசன் இந்தியன் மி டூ குறித்த கேள்விக்கு ‘யார் மீது புகார் சொல்லப்படுள்ளதோ அவர்கள்தான் இதற்கான பதிலைக் கூறவேண்டும்’ என மய்யமானப் பதிலைக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்