Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சின்மயி-வைரமுத்து விவகாரம்: திமுக நிலை என்ன?

Advertiesment
சின்மயி-வைரமுத்து விவகாரம்: திமுக நிலை என்ன?
, வெள்ளி, 12 அக்டோபர் 2018 (07:58 IST)
கவிஞர் வைரமுத்து அவர்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது அனைவரும். கருணாநிதி மட்டுமின்றி திமுகவின் முன்னணி தலைவர்கள் அனைவருமே அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தனர். ஆனால் தற்போது சின்மயி, வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்து திமுக தரப்பில் இருந்து யாருமே கருத்து சொல்லவில்லை.

சோபியா விவகாரம் வெளியே தெரிந்து அடுத்த நிமிடமே ஒரு பெண்ணுக்கு நேர்ந்த அநீதி என்ற ரீதியில் அறிக்கை விட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதேபோல் இன்னொரு பெண் தனக்கு நீதிவேண்டும் என்று கடந்த ஒரு வாரமாக கதறிக்கொண்டிருந்தும் அதை அதே திமுக தலைவர் கண்டுகொள்ளாமல் இருப்பபது ஏன்? நல்லவேளை வைரமுத்துவுக்கு ஆதரவாக அவர் கருத்து சொல்லவில்லை என்பது ஒரு பெரிய நிம்மதியாக உள்ளது.

சின்மயி இந்த குற்றச்சாட்டை கூறியவுடன் 'அவர் ஏன் இத்தனை வருடங்கள் அமைதியாக இருந்தார்?, ஏன் வைரமுத்துவை திருமணத்திற்கு அழைத்தார்? ஏன் அவர் எழுதும் பாடல்களை பாடினார்? என்று கேள்வி கேட்பவர்கள் கூட, வைரமுத்து நல்லவர், ஒழுக்கமானவர், சின்மயியிடம் தவறாக நடந்திருக்க மாட்டார் என்று ஒருவர் கூட சொல்லாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

webdunia
ஒரு செல்வாக்கு உள்ள மனிதர் மீது குற்றஞ்சாட்டினால் அந்த குற்றம் அவர் மீதே திரும்பிவிடும் சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் இத்தனை வருடங்கள் கழித்தாவது தைரியமாக சொல்ல முன்வந்துள்ளாரே என்று சின்மயிக்கு ஆதரவு கொடுக்காமல், குற்றஞ்சாட்டியவரையே கேள்வி மேல் கேள்வி கேட்டு நோகடிப்பது நல்லதா? என்பதை சிந்திக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருச்சி விமான நிலையத்தில் சுற்றுச்சுவரை உடைத்து கொண்டு கிளம்பிய விமானத்தால் பரபரப்பு